Header Ads



தப்லீக் ஜமாஅத்திற்கு சவூதி அரேபிய அரசு தடை, ஆபத்தான நுழைவாயில் என அறிவிப்பு


தப்லீக் ஜமாஅத் அமைப்புக்கு சவூதி அரேபியா தடை விதித்துள்ளது. தப்லீக் ஜமா அத் அமைப்பானது சமூகத்துக்கு ஆபத்தானது எனவும், பயங்கரவாதத்தின் நுழைவாயில் எனவும் சவூதி அரேபியா விமர்சித்துள்ளதாக ஏ.என்.ஐ. செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

இதேவேளை, தப்லீக் ஜமா அத், தாவா குழுவுடன் இணைந்து செயற்படுவதற்கு எதிராக மக்களை அறிவுறுத்துவதற்கு வெள்ளிக்கிழமை பிரசங்கத்தின்போது நெரம் ஒதுக்குமாறு பள்ளிவாசல்களுக்கு சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சவூதி அரேபிய இஸ்லாமிய விவகார அமைச்சர் கலாநிதி அப்துல் லத்தீப் அல் அல்ஷேக்

இது தொடர்பாக அவ்வமைச்சின் டுவிட்டர் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், சவூதி அரேபிய இஸ்லாமிய விவகார அமைச்சர் கலாநிதி அப்துல் லத்தீப் அல் அல்ஷேக், மசூதிகளில் உள்ள போதனை செய்பவர்களுக்கும், மசூதிகளுக்கும் பிறப்பித்த உத்தரவில், வெள்ளிக்கிழமை தொழுகையின்போது, அல் அஹ்பாப் எனச் சொல்லப்படும் தப்லிக் மற்றும் தவா குழுவுடன் மக்கள் பழகுவதை எச்சிரியுங்கள்’ எனத் தெரிவித்துள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“சமூகத்துக்கு தப்லீக் ஜமாஅத்தால் ஆபத்து இருப்தால், பள்ளிவாசல்கள் மக்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும். தவறான வழிகாட்டல்


, தடம் மாறுதல், ஆபத்து போன்றவை இந்தக் குழுவால் இருக்கிறது. பயங்கரவாதத்தின் வாயில்களில் ஒன்றாக இக்குழு இருக்கிறது. சமூகத்துக்கு ஆபத்தான குழுவாக இருப்பதால், தப்லீக் தவா குழுவை சவூதி அரேபிய அரசு தடை செய்கிறது” என்றும்” சவூதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது.

metronews

7 comments:

  1. அப்போ pub club theatre musical shows சவூதிக்கு நரகத்தின் நுழைவாயில் என்று தோன்றவில்லையா???

    ReplyDelete
  2. எதிர் பார்த்ததுதான். சவூதி அரேபிய நிலைபாடுகளில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை இலங்கை முஸ்லிம்களின் சமூக பொருளாதார அரசியல் ஆய்வாளன் என்கிற முறையில் மிக கவனமாக உற்று நோக்கி வருகிறேன். இதுதொடர்பான விவாதங்கள் இலங்கையிலும் குறிப்பாக கிழக்கில் சூடுபிடிக்கும். ஜனநாயகரீதியாக விவாதங்கள் எடுத்துச் செல்லப்படுவதை முஸ்லிம் அறின்ஞர்கள் தென்கிழக்கு பல்கலைக்கழகம் உடபட நிறுவனங்கள் பள்ளிவாசல்கள் தலையிட்டு உறுதிப்படுத்த வேண்டும். - வ.ஐ.ச.ஜெயபாலன் கவினன்

    ReplyDelete
  3. இன்னும் 15 வருடங்களில் உலகில் அதிகமாக மின்சார வாகனங்களே பாவனையிலிருக்கும். அதன் வினையாக அல்லாஹ்வின் சோதனை பொருளாதார ரீதியாக இந்த அரபிகளிடத்தில் வந்து பொருளாதரதில் பின்தங்கிய நிலைக்கு இவர்கள் செல்வதும் கியாம நாளின் அடையாளமாகும்

    ReplyDelete
  4. bar , club , agrement with isrea terrorist , cimea theater , are not terrorism

    ReplyDelete
  5. நான் இஸ்லாத்தினைப்புரிந்த வகையிலும் சரியெனவே புலப்படுகிறது. வானத்திற்கு மேலுள்ளவற்றை மட்டும் பேசி பல் சமூக அமைப்பில் நல்லிணக்கத்தினைப் பேண முடியாது.

    ReplyDelete
  6. It is too late to ban tableeg eventhough their idelogy is wahhabism. According to UK spy who has written in his book says, they helped to form this group to divide the Muslim Ummaah.

    ReplyDelete
  7. Soudiyil eppothum thadaithaan ithu puthiya vidayamalla.ankey mudiyaatchi kavilnthu jananaayaham vanthu vidum enru payappaduhirarkalpola.

    ReplyDelete

Powered by Blogger.