December 16, 2021

"முஸ்லிம்களுக்கு காணிப்பிரச்சினையில்லை என சாணக்கியன் கூறியது, அவர் குறித்த முஸ்லீம்களின் நல்லபிப்பிராயத்தை கேள்விக்குட்படுத்தியுள்ளது"

அண்மையில் இட்டம்பெற்ற பாராளுமன்ற விஷேட ஒத்திவைப்பு பிரேரணையை அடுத்து மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களது எல்லை நிர்ணயம் காணிப்பிரச்சினை குறித்து வாதப்பிரதிவாதங்கள் பல்வேறு மட்டத்திலும் எழுந்துள்ளது. இனநல்லுறவு, சகவாழ்வு, சமாதான சூழல் என்பன மாவட்டத்தில் நிலைத்திருக்கவேண்டுமாயின் இனங்களுக்கிடையிலான காணிதொடர்பான பிரச்சினைகள் தீர்த்துவைக்கப்படவேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து காணப்படாது. 

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு காணிப்பிரச்சினையில்லை என்ற கருத்தினை கெளரவ பா.ம.உ.சாணக்கியன் அவர்கள் முன்வைத்திருப்பது அவர் குறித்த முஸ்லீம் சமுகத்தின் நல்லபிப்பிராயத்தை கேள்விக்குற்படுத்தியுள்ளது. இதேவேளை கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் அவர்களும் குறித்த பாராளுமன்ற உறுப்பினரை பொதுவிவாதத்திற்கு அழைத்திருப்பதும் இன்று ஊடக கவனஈர்ப்பை பெற்றுள்ளது. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் புரையோடிப்போயுள்ள முஸ்லிம்களது காணி தொடர்பான பிரச்சினைகள் அவ்வப்போது தேர்தல் கால வாக்குறுதிகளாகவும் அரசியலில் இனவாத கொந்தளிப்பை தக்கவைத்துக்கொள்ள ஒரு ஊடகமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. மாவட்ட காணிப்பிரச்சினை நாடறிந்த சர்வதேசம் அறிந்த விடயம். அதில் விவாதம் நடாத்துவதற்கும்  சமூகங்களுக்கிடையில் முருகளை தோற்றுவிக்கவும் ஒன்றும் இல்லை. நிபுணத்துவ ஆணைக்குழுக்களின்  பறிந்துறைகளே போதுமானது. 

என்றபோதும் குறித்த முஸ்லிம்களது காணிப்பிணக்குகள் தொடர்பாக விவாதம் நடாத்துவதைவிட கலந்துரையாடல்மூலம் அதனை தீர்த்துக்கொள்ள முஸ்லீம் சமூகம் இதயசுத்தியுடன் தயாராக உள்ளது. அரசியல்  வாதிகளின் மேலான அவநம்பிக்கை நீண்டு செல்கின்ற இந்நிலைமையில் சிவில் சமூக பிரதிநிதிகளுடன் பேசுவது வெளிப்படைத்தன்மையாக அமையும். தீகவாபி தொடர்பில் மர்ஹூம் அஷ்ரப் அவர்களுக்கும் மறைந்த சோமதேரர் அவர்களுக்கும் இடையிலான விவாதம் வெறுமனே இனத்துவ கிலேசங்களை தூண்டியதை தவிர சுனாமி வீட்டுத்திட்டத்தைக்கூட இன்றுவரை பெற்றுக்கொடுக்காத ஒரு விடயமாக அமைந்துள்ளது.

எனவே கெளரவ சாணக்கியன் அவர்கள் தலைமையில், கெளரவ பா.ம.உ.சந்திரகாந்தன், கெளரவ வியாழேந்திரன் மற்றும்  சிவில் சமூக பிரதிநிதிகள், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள்  குழுவினர் திறந்தவெளி கலந்துரையாடல் ஒன்றுக்கு வருகை தருமாறு பகிரங்க அழைப்பினை விடுக்கின்றேன். முஸ்லீம் சிவில் சமூக பிரதிநிதி என்ற வகையில் இவ்வழைப்பினை  விடுவதில் எவ்வித தயக்கமும் இன்றி முன்வைக்கின்றேன். கலந்துரையாடலின் முடிவில் நியாயமென கருதும் விடயங்கள் உடன் அமுலுக்கு வருவதற்கான அரச பொறிமுறை ஒன்றும் நடுவர் தரப்பாக அமையவேண்டும் எனவும் அதற்கு பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் பொறிமுறையினை ஏற்படுத்துவீர்கள் எனவும் நம்பிக்கை தெரிவிக்கின்றேன். 

குறித்த கலந்துரையாடலுக்கு நான் மேற்குறிப்பிட்ட  அனைத்து தரப்பினரும் பங்குகொள்வதில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் தாங்கள்  மாத்திரம் இக்கலந்துரையாடலுக்கு வருகைதருவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என தெரிவித்துக்கொள்கின்றேன். 

காலதாமதத்தினை ஏற்படுத்தி விடயத்தை மூடிமறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் உங்களது காலம் நேரம் இடம் ஆகியவற்றை அறியத்தருவீர்கள் என எதிர்பார்க்கின்றேன். 

 ஜுனைட் நளீமி 

சிவில் சமூக பிரதிநிதி.

3 கருத்துரைகள்:

தமிழ் ஈழ அக்கிரம ஆட்சியில் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டதையோ அதனால்தான் இலங்கையில் ஒட்டு மொத்த தமிழ் சமூகம் சாபத்தால் சீரழிந்து விட்டது காணாததால் தான் தற்போதும் ஈழத்தில் தமிழர்கள் இன்னும் இன்னும் முஸ்லிம்கள் மீது அளவு கடந்த ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். ஈழவரலாற்றில் அப்பாவி முஸ்லிம்களை ஆக்கிரமிப்பு செய்து அட்டூழியங்கள் புரிந்ததை தவிர தமிழ் பயங்கரவாத அமைப்புகளின் சாதனை என்று எதுவும் இல்லை. (இது இளகிய இரும்பு மீதான கொல்லர்களின் செயலை நேரொத்தது. )எதுவானாலும் அஅனைத்து அத்துமீறல்களுக்கும் அனுபவிக்க வேண்டிய விடயங்கள் தானாகவே வந்து சேரும்.

Post a Comment