Header Ads



அனுர மற்றும் சஜித் ஆகியோரின் அணிகள் அரசாங்கம் கவிழும் என கனவு காண்கின்றனர் - ஜோன்ஸ்டன்


நாடு வங்குரோத்து அடைய போகிறது வங்கியில் வைப்புச் செய்துள்ள பணத்தை திரும்பபெறுமாறு ஒருவர் சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்றை பதிவேற்றியுள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ(Jhonston Fernando) தெரிவித்துள்ளார்.

மகநெகும அவிருத்தித்திட்டத்தை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அந்நிய செலாவணி கையிருப்பில் இல்லாது போனால், அரசாங்கம் வீழ்ந்து விடும். எனினும் நாங்கள் அப்படி நடக்க இடமளிக்க மாட்டோம். எம்மால் திறமையாக அரசாங்கத்தை கையாள முடியும். அந்நிய செலாவணி கையிருப்பில் இருந்து குறைவதை எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன.

அனுர மற்றும் சஜித் ஆகியோரின் அணிகள் அரசாங்கம் கவிழும் என கனவு காண்கின்றனர். நாட்டில் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதை எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன.

அப்போது மக்கள் அவர்களின் பக்கத்திற்கு சென்று வாக்களித்து அரசாங்கத்தை அமைக்க உதவுவார்கள் என நினைக்கின்றனர்.

ஒருவர் வீடியோ ஒன்றை பதிவிட்டு வங்கிகளில் இருந்து பணத்தை திரும்ப பெறுமாறு கூறுவதை நான் பார்த்தேன். இந்த நாடு வங்குரோத்து அடைந்து விடும் எனவும் அவர் கூறுகிறார்.

இவை அனைத்துக்கும் பின்னால் எதிர்க்கட்சியினரே இருக்கின்றனர். அவர்களுக்கு ஆட்சிக்கு வந்து ஆட்சி நடத்த நாடு இருக்க வேண்டும்.

எம்முடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்ற தேவை எதிர்க்கட்சியினருக்கு இல்லை. நாடு எப்படியாவது அழிந்துபோகட்டும் என்பதே அவர்களின் பிரார்த்தனையாக இருக்கின்றது.

நாட்டின் பொருளாதாரம் மேலும் முன்னேற்றமடைய வேண்டும் என்பதே எமது பிரார்த்தனை. நாட்டு மக்களின் வாழ்க்கை பாதுகாத்து, சிறந்த நாட்டை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. உலகம் என்ற வகையில் நாம் இந்த அனர்தத்தில் இருந்து மீள முடியும் எனவும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.