Header Ads



மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்ய முடிவெடுத்திருந்தால், உடனே அதனை கைவிடவும் - ஆனந்த தேரர்


மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை ராஜினாமா செய்யத் தயாராகி வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். 

நாரஹேன்பிட்டி அபயராமயவில் இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போது தேரர் இதனை தெரிவித்தார்.  தேரர் மேலும் கூறியதாவது, 

நாட்டை அபிவிருத்தி செய்வது தொடர்பில் ஜனாதிபதிக்கு சரியான தொலைநோக்குப் பார்வை இருந்தாலும் அவரைச் சுற்றியுள்ள சிலர் அதற்கு இடையூறாக செயற்படுகின்றனர். 

“பிரதமர் போனால் எங்களிடம் சொல்வார். மகிந்த ராஜபக்சவை விரட்டுவதற்கான சதியா என எங்களுக்குத் தெரியாது. இன்று நாட்டில் சிறு சிறு பிரச்சினைகள் உள்ளன. ஜனாதிபதியை சுற்றி இருப்பவர்களால் நாட்டை கொண்டு செல்ல முடியாது. சகோதரர்கள் ஒன்றாக டொலரின் பின்னால் செல்ல வேண்டாம்.., இருப்பவர்களை மாற்றினால் நாட்டை கட்டியெழுப்பலாம். நடக்கப்போவதை தடுப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷ சென்றால் சரிவராது.. மகிந்த ராஜபக்ச இதில் இருக்க வேண்டும். முடிவெடுத்திருந்தால் உடனே அதனை கைவிடவும். என்றார். 


1 comment:

  1. கேவலம், இந்த நாட்டின் மிக உயர்ந்த கல்வி நிலையமான கொழும்பு பல்கலைக்கழகத்தின் தரத்தைச் துச்சமாக மதிக்கும் இந்த கேவலம் கெட்டவர்களை பல்கலைக்கழகத்திலிருந்து துரட்சி பண்ணப்பட வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.