Header Ads



சவூதி அரேபியாவின் 7200 மில்லியன் ரூபா நிதியில், அபிவிருத்தி செய்யப்பட்ட வீதிகள் மக்களிடம் கையளிப்பு


சவூதி அரேபிய நிதி  உதவியின் கீழ் 7200 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்பட்ட பேராதனை - பதுளை - செங்கலடி (A005) வீதியின் பிபிலிலிருந்து செங்கலடி வரையிலான 86.7 கிலோமீற்றர் பகுதி பொதுமக்களின் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது.

மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைக்கும் பேராதனை - பதுளை - செங்கலடி (A005) வீதி 275 கிலோமீற்றர் நீளமானது. பிபில முதல் செங்கலடி வரையிலான 86.7 கிலோமீற்றர் நீளமான வீதிஆளும் தரப்பு பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் 28-12-2021 அன்று விரிவுபடுத்தப்பட்டு பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படுகிறது .

பிபிலயிலிருந்து செங்கலடி வரையிலான அபிவிருத்தி செய்யப்பட்ட வீதியின் நீளம் 86.7 கி.மீ. இந்த வீதி அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு கடந்த 2014ம் ஆண்டு நடத்தப்பட்டது. இந்த வீதியை  இரண்டு உள்ளூர் நிர்மாணத்துறை நிறுவனங்கள் மூன்று கட்டங்களாக நிர்மாணித்துள்ளனர். முதற்கட்டமாக பிபில முதல் பதியத்தலாவை வரையிலான 29 கிலோமீற்றர் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. . இரண்டாம் கட்டமாக பதியத்தலாவ தொடக்கம் தம்பிட்டி வரை 30 கிலோ மீற்றர் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. . மூன்றாம் கட்டமாக தம்பிட்டிய முதல் செங்கலடி வரையிலான 27.7 கிலோமீற்றர் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. பிபிலை முதல் செங்கலடி வரையிலான வீதி அபிவிருத்தித் திட்டத்திற்கு 7,200 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வீதி நிர்மாணத்தின்  போது நிலங்களையும் சொத்துக்களையும் இழந்த பிபில, ரிதீமாலியத்த, பதியத்தலாவ மற்றும் மஹாஓயா ஆகிய பிரதேச  செயலக பிரிவு மக்களுக்கு 12.4 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.

ராஜாங்க அமைச்சர் எஸ். வியாளேந்திரன்,     சவூதி அபிவிருத்திக்கான நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுல்தான் அல் மர்ஷாத், பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் உட்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

ஊடகப்பிரிவு 

நெடுஞ்சாலை அமைச்சு

1 comment:

Powered by Blogger.