Header Ads



விடுமுறை வழங்கததால் ஆத்திரமடைந்த, பொலிஸ் சார்ஜனின் வேட்டை - பலி எண்ணிக்கை 4 ஆகியது (முழு விபரம்)


- ஷிஹான் -

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் சார்ஜன் ஒருவர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பொலிசார் மீது மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 4 பொலிசார் உயிரிழந்ததுடன் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் நேற்று (25)நள்ளிரவு இடம் பெற்றுள்ளதாகவும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பொலிஸ் சார்ஜனை கைது செய்துள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர். 

குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் சார்ஜன் ஒருவர் வீடு செல்வதற்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் விடுமுறை கோரியுள்ளார். 

இந்த நிலையில் அவருக்கு விடுமுறை வழங்கததால் ஆத்திரமடைந்த பொலிஸ் சார்ஜன் சம்பவதினமான நேற்று (25) இரவு 11.30 மணியளவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வாகனத்தில் ஏறி ரோந்து நடவடிக்கைக்கு செல்வதற்கு தயாராகி இருந்தபோது அவர் மீது பொலிஸ் சார்ஜன் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார். 

இதனையடுத்து அவரை தடுக்க முற்பட்ட பொலிசார் மீது அவர் துப்பாக்கி பிரயோகம் செய்ததையடுத்து சம்பவ இடத்தில் 3 பொலிசார் உயிரிழந்ததுடன் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். 

மேலும், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 2 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் 

சம்பவத்தையடுத்து அந்தபகுதியில் பெரும் பதற்றம் நிலை ஏற்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்கு பொலிஸ் அத்தியட்சகர் உட்பட பொலிஸ் உயர் அதிகாரிகள் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


1 comment:

  1. இது போன்ற செயல்கள் படுபாதகச் செயல்கள் இனிமேலும நடைபெறாமல் இருக்க என்ன நடவடிக்கை எ்டுக்க வேண்டுமோ அந்த நடவடிக்கையை உடனடியாக எடுத்து அரச ஊழியர்களையும் பொதுமக்களையும் காப்பாற்ற உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேணடும்.ஆனால் பிரதமர் பதவியைக் காப்பாற்ற குடும்ப சகிதம் சிலைவணக்கத்துக்காக இந்தியாவில். நிதி,பணநெருக்கடியால் அவதியிரும் நாட்டைக் காப்பாற்றும் நிதியமைச்சர் ஒரு மாதம் உல்லாசப்பயணமாக தனது சொந்த நாட்டில், பொதுமக்களுக்காகப் சேவையாற்ற வேண்டிய மந்தி(ரி)கள் எல்லாம் வௌிநாடுகளில் பொழுதுபோக்கு உல்லாசங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்க நாடும் நாட்டு மக்களும் அல்லலுற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.உலகில் ஈடு இணையில்லாத ஒரே நாடு இலங்கை!

    ReplyDelete

Powered by Blogger.