Header Ads



பங்களாதேஸிடம் பெற்ற கடனை செலுத்தும் காலம் 3 மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது


பங்களாதேஷ் வங்கியிடம் இருந்து இலங்கை பெற்ற கடனுக்கான திருப்பிச் செலுத்தும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

கடன் வசதியின் திருப்பிச்செலுத்தும் மூன்று மாத கால அவகாசம் முடிவடைந்த நிலையிலேயே, அதனை மூன்று மாதக்காலத்துக்கு நீடித்துள்ளதாக பங்களாதேஷ் வங்கி அறிவித்துள்ளது.

இலங்கையின் கோரிக்கைக்கு இணங்ககே இந்த கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது என்று பங்களாதேஷ் வங்கியின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் ஊடனான நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் இலங்கை $200 மில்லியன் கடன் வசதியை பெற்றது.

2021 ஆகஸ்ட் 19 இல் 50 மில்லியன் டொலர்களை பங்களாதேஸ் அணி,இலங்கைக்கு வழங்கியது. இரண்டாவது தவணை தொகையான 100 மில்லியன் டொலர் 2021 ஆகஸ்ட் 30ஆம் திகதி வழங்கப்பட்டது.

மூன்றாவது தவணையான 50 மில்லியன் டொலர் 2021 செப்டம்பர் 21 இல் வழங்கப்பட்டது.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கையின்படி, பங்களாதேஷூக்கு கடன் தொகையின் வட்டியாக 2 சதவீதத்தை செலுத்தவேண்டும்.

ஆறு மாதங்களுக்குப் பிறகும் தவணையின் நிதித் தொகை செலுத்தப்படாமல் இருந்தால், 2.5 சதவீதம் மற்றும் கடன் தொகை திருப்பிச்செலுத்தப்படவேண்டும்

எனினும் இலங்கை குறைந்தபட்சம் ஒன்பது மாதங்களுக்கு இந்த நிதியைப் பயன்படுத்தும் என்று தாம் எதிர்பார்ப்பதாக பங்களாதேஸ் வங்கியின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

இதற்கிடையில் இன்றைய நிலவரப்படி, பங்களாதேஷின் அந்நிய செலாவணி கையிருப்பு 46.3 பில்லியன் டொலர்களாக இருந்தது.

இலங்கையின் அந்நிய செலாவணி இருப்பு 2021 ஆகஸ்ட் இறுதிக்குள் சுமார் ஒரு பில்லியன் டொலராக குறைந்துள்ளது.

No comments

Powered by Blogger.