Header Ads



இன்று சிறைக்குச் சென்ற ஹரீன் - ரஞ்சன் கூறிய 2 தகவல்கள்


மிகவும் கஷ்டமான, கசப்பான அனுபவமாக இருந்தாலும் அந்த அனுபவத்தை எதிர்கொண்டு மிகவும் தைரியமாக ரஞ்சன் ராமநாயக்க (Ranjan Ramanayake) இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) தெரிவித்துள்ளார்.

கொழும்பு வெலிகடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை இன்று நேரில் சென்று பார்த்த பின்னர், செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எனது அன்புக்குரிய நண்பன், நேசத்துக்குரிய பேராட்ட தோழன் ரஞ்சன் ராமநாயக்கவை பார்க்க நான் இன்று வெலிகடை சிறைச்சாலைக்கு சென்றேன். கடினமான, கசப்பான அனுபவமாக இருந்தாலும் அதனை எதிர்கொண்டு, மிகவும் தைரியமாக ரஞ்சன் இருக்கின்றார் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் நினைவுப்படுத்த வேண்டும்.

தவறான வார்த்தை வெளியிட்ட தவறுக்காக ரஞ்சன் பாரதூரமான தண்டனை அனுபவித்துக்கொண்டு சிறையில் இருக்கின்றார். நாட்டின் அண்மைய கால வரலாற்றில் அதிர்வை ஏற்படுத்திய ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகள் சுதந்திரமாக வெளியில் இருக்கின்றனர்.

நாட்டின் அப்பாவி மக்களின் சீனியிலும் கோடிக்கணக்கில் மோசடி செய்தவர்கள் சுதந்திரமாக இருக்கின்றனர். அப்பாவி விவசாயிகளுக்கான மலக் கழிவுவை கொண்டு வந்து, அதன் மூலம் கோடிக்கணக்கில் இழப்பீ செய்த தீர்மானத்தவர்கள் சுதந்திரமாக இருக்கின்றனர்.

எனினும் ஒரு வார்த்தையின் தவறுக்காக ரஞ்சன் சிறைக்குள் தண்டனை அனுபவித்து வருகிறார்.

இன்று புனிதமான நத்தார் தினம். சமாதானத்தின் செய்தியை வார்த்தைகளால் உலகத்திற்கு கொண்டு வந்த புனிதரின் பிறந்த தினம்.

உண்மையில் ரஞ்சன் என்னிடம் ஒரு கோரிக்கை விடுத்தார். அனைத்து கிறிஸ்தவர்கள் மற்றும் இலங்கை மக்கள் இனிய நத்தாரை பிரார்த்தித்தார். இரண்டாவது அவருக்கு உயர் கல்வி கற்கும் தேவை இருப்பதாகவும் அதற்கான வசதி வாய்ப்புகளை எதிர்பார்ப்பதாகவும் ரஞ்சன் உணர்வுபூர்வமாக கூறினார்.

ரஞ்சனின் விடுதலைக்காக போராடும் அனைவருக்கும், அமைதியாக அதற்கு ஆதரவு வழங்குவோருக்கும் தனது நன்றியை ரஞ்சன் தெரிவித்துக்கொண்டார்.

ரஞ்சனின் விடுதலைக்காக நாங்கள் 2022 ஆம் ஆண்டு மிகவும் தீவிரமாக போராடுவோம். இது எனது வாக்குறுதி. அத்துடன் ரஞ்சன் விடுதலையானால், எனது தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அவருக்கு வழங்க நான் இரண்டு முறை யோசிக்க மாட்டேன் என ரஞ்சனிடம் வாக்குறுதியளித்தேன்.

நல்ல மனித தனது மனதுக்குள் புதைத்து வைத்த நல்லதையும், கெட்ட மனிதன் தனது மனதுக்குள் புதைத்து வைத்துள்ள கெட்டத்தையும் வெளியிடுவான் என பைப்பிலில் கூறப்பட்டுள்ளது.

நாங்கள் இந்த நாட்டில் நியாயத்தை மதிக்கும் அனைத்து மக்களிடமும் கோரிக்கை விடுக்கின்றோம்.

“நீதிபதி” என்ற வார்த்தைக்காக ரஞ்சன் நான்கு ஆண்டுகளுக்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த தவறுக்காக அவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது நியாயமா, என சிந்தித்துப் பாருங்கள்.

இந்த புனிதமான நத்தார் நாளில் நான் கடவுளிடம் கோரிக்கை ஒன்றை விடுக்கின்றேன். “தேவனே இவர்கள் தெரியாமல் செய்த தவறுக்காக இவர்களை மன்னியும்” என ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.  

No comments

Powered by Blogger.