Header Ads



மறு அறிவித்தல் வரை நாடாளவிய ரீதியில் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் இடைநிறுத்தம் - 24 மணித்தியாலத்தில் 20 வெடிப்புச் சம்பவங்கள்


மறு அறிவித்தல் வரை நாடாளவிய ரீதியில் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல பாகங்களிலும், கடந்த 24 மணி நேர காலப்பகுதியில் சுமார் 20 சமையல் எரிவாயு தொடர்பான வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலை இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (02) முதல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ காஸ் நிறுவனமும் உறுதி செய்துள்ளது.

எவ்வாறாயிலும், சந்தையில் தட்டுப்பாடு நிலவும் லாவ்ஸ் காஸ் நிறுவனம் சிலிண்டர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் எவ்விதமான அறிவித்தல்களையும் இதுவரை வெளியிடவில்லை.

1 comment:

  1. தடைசெய்வதும்,நீதிமன்ற உத்தரவைப் பெற்று லீட்ரோ வாயு விற்பனையைத் தடைசெய்வதும் மிகவும் இலகுவான விடயம். அதன் விளைவையும் அதற்கான பொதுமக்களுக்கு வழங்கிய தற்காலிக நிவாரணமும் என்ன எனக் கேட்டால் அப்படியொன்றுமில்லை. அவ்வாறான ஒரு திட்டம் அரசாங்கத்துக்கு இல்லை என்பதும்தான் விடை. எனவே பொதுமக்களாகிய நாம் எமது அன்றாட வாழ்க்கைக்கு அவசியமான வாழத்தேவையான உணவைத் தயார் செய்து கொள்ள அரசாங்கம் என்ன நடவடிக்ைக இதுவரை எடுத்துள்ளது என்பதை அரசாங்கம் எமக்கு உடனடியாக அறிவிக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.