Header Ads



20 வருடங்களாக வியாபாரம் செய்யும் அப்துல் கலீமை, அச்சுறுத்தி வெளியேற்றும் நடவடிக்கையில் அதிகாரிகள் - வாழைச்சேனையில் அநீதி


- எஸ்.எம்.எம்.முர்ஷித் -

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் ஓட்டமாவடி கொழும்பு பிரதான வீதியில் மஜ்மாநகர் சந்தியில் காணியில் கடை அமைத்து வியாபாரம் செய்து வரும் என்னை வாழைச்சேனை வனஇலாகா அதிகாரிகள் உடனடியாக எழும்புமாறு கோரியுள்ளதாக சம்பந்தப்பட்ட வியபாரியான ஏ.எல்.அப்துல் கலீம் (வயது 58) தெரிவித்தார்.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் ஓட்டமாவடி கொழும்பு பிரதான வீதியிலுள்ள காணியில் இருபது வருடங்களுக்கு மேலாக எனது தந்தை சிறிய கடை அமைத்து வியாபாரம் செய்து வந்த நிலையில் பின்னர் நான் அதே இடத்தில் சாப்பாடு, சர்பத், இளநீர், தேனீர் போன்றவற்றை வியபாரம் செய்து வருகின்றேன்.

அத்தோடு நான் இங்கு வியாபாரம் செய்வதற்கு என்னால் ஓட்டமாவடி பிரதேச சபையில் வியாபார அனுமதிப் பத்திரம் பெற்றுள்ளதுடன், மின்சார பட்டியலும் எனது பெயரியல் வருவதுடன், குறித்த காணிக்காக என்னால் விண்ணப்பித்த ஒப்ப துண்டும் என்னிடம் உள்ளது.

இந்த நிலையில் தற்போது வாழைச்சேனை வனஇலாகா அதிகாரிகள் வருகை தந்து என்னை இவ்விடத்தில் இருந்து எழும்பி செல்லுமாறு கோரியுள்ளனர். இது என்னுடைய இடம் என்பதற்கு என்னிடம் பல ஆதாரங்கள் இருந்தும் என்னை அகற்ற முற்படுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

குறித்த இடத்தில் மேற்கொள்ளும் வியாபாரத்தின் மூலம் எனது குடும்பத்தின் வாழ்வாதாரம் தங்கி உள்ளது. எனவே உடனடியாக நாட்டின் ஜனாதிபதி மற்றும் அரச அதிகாரிகள் இதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு என்னுடைய இடத்தில் நான் வியாபாரம் செய்வதற்கு உரிய நடவடிக்கையை வழங்கி உதவுமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.


2 comments:

  1. 20 வருடம் என்ன, 200 வருடம் நீ கடை வைத்திருந்தாலும் உனக்கும் சொந்தமில்லாதது சொந்தமில்லை சகோதற்றா, அதுதான் இஸ்லாம் நமக்கு சொல்வது,

    ReplyDelete
  2. இஸ்லாம் பேசும் அன்பர் முதலில் இவருக்கு வாழ்வாதார வழி செய்து கொடுத்தால் சிறப்பாக இருக்கும்

    ReplyDelete

Powered by Blogger.