December 23, 2021

முஸ்லிம்கள் 13 வயது சிறுமி, உள்ளிட்ட பலரை திருமணம் செய்கின்றார்கள், இது மிக ஆபத்தானது


மதத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு நாட்டுக்கான அரசியல் யாப்பினை உருவாக்க முடியாது என சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு உருவாக்கப்படும் யாப்பு ஜனநாயக நாட்டுக்கான அம்சங்களை கொண்டிருக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் சிறுபான்மை மக்களின் பிரதிநிதிகள் ஒரே நாடு, ஒரே சட்டம் செயலணிக்கு தமது ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை வழங்காதிருப்பது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் எனவும், எனினும் இது அவர்கள் சார்பு மக்களுக்கு இழைக்கும் துரோகம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் உள்ளிட்ட குழுவினர் இன்றைய தினம் ஒரே நாடு, ஒரே சட்டம் செயலணிக்கு தமது ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை வழங்குவதற்காக சென்றிருந்ததோடு, பின்னர் ஊடகங்களுக்கும் கருத்து வெளியிட்டனர்.

இதன்போது, ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோட்பாட்டை முன்னெடுப்பதற்கு அமைக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதி செயலணி ஒற்றுமை இன்மையையும், பிரிவினையையும் ஏற்படுத்தக்கூடிய பாரிய ஆபத்தைக் கொண்டிருப்பதால் அதனை திட்டவட்டமாக நிராகரிப்பதாக சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்த விடயம் குறித்து ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளிக்கும்போதே அக்மீமன தயாரத்ன தேரர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். “கருத்து வெளியீட்டு சுதந்திரம் யாருக்கும் உண்டு, வற்புறுத்தலின் பேரில் கருத்துக்களை வெளியிடக் கோர முடியாது.

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் சார்பில் தெரிவான பிரதிநிதிகள் இருக்கின்றார்கள். அவர்கள் அவர்களின் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு செயற்படாமல் இருப்பது அவர்களின் தவறு. அனைவரும் இணைந்துதான் இந்தப் பணியை மேற்கொள்ள வேண்டும்.

இன்று காணப்படும் வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் காணப்படும் இல்லாமல் போகும் பட்சத்தில், தீவிர கொள்கைகள் மாற்றமடையும்போது அவர்களுக்கு வேதனையளிக்கலாம். இதனால் அவர்கள் இதில் பங்கேற்மால் இருக்கலாம்.

அவ்வாறான ஒரு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் இதில் பங்கேற்காமல் இருப்பதால், காணப்படுகின்ற சட்டத்தை பின்பற்ற வேண்டிய அவசியம் ஏற்படும். உதாரணமாக இந்த நாட்டில் வாழும் சிங்கள தமிழ் மக்களுக்கு ஒருவர் ஒருவரை மாத்திரமே திருமணம் முடிக்க முடியும்.

எனினும் முஸ்லிம்கள் பலரை திருமணம் முடிக்கின்றனர். 13 வயது சிறுமியை அவர்கள் திருமணம் செய்கின்றார்கள். இது மிக ஆபத்தான விடயம். இதனை மாற்றியமைத்து அரசியமைப்பை மாற்றியமைக்க வேண்டும் இல்லாவிடின், 

இது பழங்குடி சட்டமாகவே மாறும். மதத்தின் அடிப்படையில் யாப்பினை உருவாக்க முடியாது. இது பழங்குடி சட்டமல்ல, அனைவருக்கும் சமமான வாய்ப்புக்களை வழங்கும் வகையிலான ஜனநாயக யாப்பாக இது அமைய வேண்டும். TW

3 கருத்துரைகள்:

இந்த மத வெறி பிடித்த சக்கிலி சிங்கள தீவிரவாதிகள் முஸ்லிம் நாடுகளாக தேடி சென்று பிச்சையெடுத்துக்கொண்டிருக்கும் பொழுதும் இவர்கள் முட்டாள் தனம் இன்னும் அடங்கவில்லையென்றால் இவர்களை இஸ்லாமிய நாடுகள் உதைத்து அனுப்ப வேண்டும்

Ado country has bankrapted.
People dont have basically facility.you should speak for this.

"அனைவருக்கும் சமமான வாய்ப்புக்களை வழங்கும் வகையிலான ஜனநாயக யாப்பாக இது அமைய வேண்டும்" என்றுதான் எமது கற்றறிந்த முஸ்லிம் மதத் தலைவர்கள் மாத்திரமன்றி ஏனைய மதத் தலைவர்களும் கூறுகின்றார்கள். இஸ்லாமியச் சட்டங்களும் இதனைத்தான் கூறுகின்றன. எந்த முஸ்லிமும் நினைத்த மாத்திரத்தில் பல பெண்களை ஒரே நேரததில் திருமணம் செய்ய முடியாது. ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதாக இருந்தாலும்கூட முஸ்லிம் ஒருவருக்குத் பல தகுதிகள் இருகக வேண்டும். இஸ்லாமியச் சட்டங்கள் என்பது வேறு நாட்டின் அரசியல் சட்டங்கள் என்பது வேறு. எங்கே குழப்பம் ஏற்படும் என்றால் ஒரு நாட்டின் அரசியல் சட்டங்களுககுள் ஒரு மதத்தின் சட்டங்கள் உள்ளிடப்படுகின்றனவோ அப்போதுதான். உலகின் எந்த நாட்டிலும் காணப்படாத;எந்தப் பௌத்த நாட்டிலும்கூட காணப்படாத சட்டங்கள் இங்கு இயற்றப்படப் போகின்றது என்றால் அது இலங்கையில் மாத்திரம்தான். இவை எல்லாம் முஸ்லிம்களின் உரிமைகளைப் பறிக்க முயற்சிக்கும் சட்டங்கள் என்பது வெள்ளிடைமலை. தற்போது நாட்டில் இருக்கின்ற நெருக்குவாரங்களுக்குள் இப்படியான "ஞானசார செயலணிகள்" தேவையா என்பதனை சிந்திக்க வேண்டி இருக்கின்றது. பௌத்த மதத்திற்காக இஸ்லாமியர்களின் வாழ்க்கை நெறிகளை மாற்றுங்கள் என்று அரசு கூறுவது கேலிக்கிடமானதாகும். ஒரு பக்கம் விலைகள் அதிகரிப்பு அடுத்த பக்கம் கேஸ் வெடிப்பு மறுபக்கம் தேவையற்ற அதிகாரிகளை நியமிப்பதனால் ஏற்படக்கூடிய செலவுகள் அதிகரிப்பு இன்னொரு பக்கம் ஞானசாரர் போனறவரகளுக்கு கொடுபடக்கூடிய தேவையேயில்லாத செலவுகள். இவற்றிற்கு மேலதிகமாக டொலர் தட்டுப்பாடு. இவற்றையெல்லாம் சாதுரியமாக தவிர்க்கும்போது இன்னம் இன்னமும் விலைகளைக் குறைத்து உலகிற்கே முன்மாதிரியான நாடாக இலங்கையை மாற்ற முடியும். என்ன பிரச்சினை என்றால் அரசியல்வாதிகளின் ஒரே நோக்கம் பணம் சம்பாதிப்பது அடுதத தேர்தலில் எப்படியான சூழ்ச்சிகளைச் செய்து வெற்றி பெறுவது என்பதிற்றான். கடைசியாக மாட்டுப்படுவது இந்த வெட்கம் கெட்ட பொதுஜனங்கள்தான்

Post a Comment