Header Ads



11,500 விமானங்கள் 5 நாட்களில் ரத்து


கிறிஸ்மஸ் வார இறுதியில் உலகெங்கும் விமானப் பயணங்களில் உண்டான பாதிப்பு திங்களன்றும் தொடர்ந்தது.

ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவின் பல மாகாணங்களில் கோவிட் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதால், கொரோனா கட்டுப்பாடுகளின் ஓர் அங்கமாக விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன.

இதனால் விடுமுறைக்காக வெளியூர் சென்ற பல லட்சம் பேர் தங்கள் பணியிடம் உள்ள ஊர்களுக்கு திரும்ப முடியாத நிலை உலக அளவில் உண்டாகியுள்ளது.

வெள்ளிக்கிழமை முதல், உலகெங்கும் சுமார் 11,500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.  பத்தாயிரம் விமானங்களின் புறப்பாட்டு நேரம் தாமதமாகியுள்ளது.

திங்கட்கிழமை மட்டும் சுமார் 3,000 விமானங்கள் ரத்தாகின. செவ்வாய்க்கிழமையான இன்று 1100க்கும் அதிமான விமானங்கள் இதுவரை ரத்தாகியுள்ளதாக ஃப்ளைட்அவேர் எனும் விமானப் பயணம் குறித்த தகவல்களைத் தரும் இணையதளம் கூறுகிறது.

No comments

Powered by Blogger.