Header Ads



Talk With Chathura நிகழ்ச்சி சிறந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கான விருதை தனதாக்கியது


தொலைக்காட்சி கலை அரச விருது வழங்கும் விழா கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. 

இதில் தெரண தொலைக்காட்சியில் ஔிப்பரப்பப்படும் ´Talk With Chathura´ நிகழ்ச்சி, 2020 ஆம் ஆண்டின் சிறந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கான விருதை தனதாக்கி கொண்டுள்ளது. 

மேலும் 2019 ஆம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் ஔிபரப்புக்காக தயாரிக்கப்பட்ட முன்னோட்டம் (Trailer), சிறந்த தொலைக்காட்சி முன்னோட்டத்திற்கான விருதை பெற்றுக் கொண்டுள்ளது. 

அத்துடன் சிறந்த விளையாட்டு நிகழ்ச்சிக்கான விருதை ´Story Of Champions´ நிகழ்ச்சி பெற்றுக் கொண்டுள்ளது.

No comments

Powered by Blogger.