Header Ads



மர்ஹூம் ஏ.எல்.எம்.ஹாசிம் குறித்து SLBC சிங்கள அலைவரிசையில், இம்தியாஸ் Mp நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்


ஜனாதிபதி சட்டத்தரணி மர்ஹூம் ஏ.எல்.எம்.ஹாசிம் அவர்களின் நினைவு தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு இவ்வாண்டிற்கான நினைவுரையை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் நிகழ்த்தினார்.

இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபணம் சிங்கள அலைவரிசையில் நிகழ்த்தப்பட்ட உரையின் தமிழாக்கமே இது.

ஜனாதிபதி சட்டத்தரணி ஹாசிம் அவர்கள் குறித்து கதைப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தமை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எனது சிறுபராயம் முதலே அவர் தொடர்பில் எனக்கு தெரியும். அவருக்கும் எனது தந்தைக்கும் மிகவும் நெருங்கிய தொடர்புகள் இருந்தன. அவர் குறித்து நினைவு படுத்துகின்ற போது எனக்கு பல விடயங்கள் நினைவுக்கு வருகின்றன. எனது தந்தையைப் போன்று அவரும் சட்டத் துறையில் சட்டத்தரணிகளாக இருந்தார். வார இறுதி நாட்களில் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் பழைய மாணவர் கூட்டங்கள் இடம்பெறும். அகில இலங்கை முஸ்லிம் லீக்கின் கூட்டங்கள் மற்றும் எனது தந்தையின் அரசியல் கலந்துரையாடல்கள் என்பவற்றுக்கு கொள்ளுபிட்டிய சிறிகொத நிலையம் என்பவற்றில் ஒன்று கூடுவார்கள். 

எனக்கு விடுமுறை கிடைக்கின்ற போது எனது தந்தை என்னை கொழும்புக்கு அழைத்துச் செல்வார். கொழும்பில் இடம்பெறும் தந்தையின் கூட்டங்களுக்கு செல்கின்ற சந்தர்ப்பத்தில் தான் ஏ.எல்.எம் ஹாசிம் அவர்களை நான் தெரிந்து கொண்டேன்.எனது சிறு பராயத்தில் கொழும்பு வைத்தியசாலை வீதியில் உள்ள அகில இலங்கை முஸ்லிம் லீக்கின் தலைமை அலுவலகத்தில் நான் அவரை அடிக்கடி சந்தித்திருக்கின்றேன். முஸ்லிம் லீக் எமது நாட்டில் உள்ள மிகப் பழைய அமைப்பாகும். 1947 ஆம் ஆண்டு சிங்கள மகா சபை, முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல அமைப்புக்களைச் சேர்ந்த தேசிய போராளிகளின் ஒன்றிணைப்புடன் ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. அன்றைய காலத்தில் முஸ்லிம் லீக்கிற்கு கலாநிதி டி.பி ஜயா அவர்கள் தலைமைத்துவத்தை வழங்கினார்கள். எனது தந்தையோடு முஸ்லிம் லீக் அலுவலகத்திற்கு செல்லும் போது அந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம் லீக்கின் தலைவராக எம்.சி.எம் கலீல் அவர்கள் தலைவராக இருந்தார்கள். இணைச் செயலாளராக சட்டத்தரணி ஹாசிம் அவர்கள் செயற்பட்டமை எனக்கு நினைவு இருக்கின்றது. அன்று இடம்பெற்ற கூட்டங்களில் கடைசி ஆசனங்களில் அமர்ந்து அந்தக் கூட்டங்களை அவதானித்தமை எனது நினைவு வருகின்றது. அது போன்ற பல விடயங்களை என்னால் நினைவு கூற முடியும். எனது சிறு பராய காலத்தில் இவ்வாறான நிகழ்வுகளில் கலந்துகொண்டு பல விடயங்களை கேட்டதோடு மட்டுமல்ல அவற்றின் ஊடாக பல்வேறு விடயங்களை கற்றுக்கொண்டதையும் என்னால் நினைவு கூற முடியும். 


அவ்வாறான கலந்துரையாடல்களில் கராசாரமான விவாதங்களை காண முடிந்தது. அத்தோடு ஜனாநாயக ரீதியில் மேற்கொள்ளப்படுகின்ற கலந்துரையாடல்களின் பின்னர் தீர்க்கமான முடிவுகள் எட்டப்பட்ட பின்னர் புரிந்துணர்வுடன் பிரிந்து செல்கின்றனர். ஹாசிம் அவர்கள் மிகவும் முக்கியமானவராக இருந்தார்கள். நாம் சிறுவர்களாக இருந்தாலும் புன் சிரிப்புடன் எம்முடன் கதைத்து விட்டு செல்கின்ற அந்த தன்மை சிறந்தது.எனது தந்தையும் அவரும் சட்டத்தரணிகள். அவர்கள் சட்டத்தரணிகளாக தொழிலை கொண்ட சந்தர்ப்பத்தில் அந்தப் பிரதேசங்களில் இருந்த சட்டத்தரணிகள் சங்கத்தில் அவர்கள் இருவரும் தலைவர்களாக இருந்திருக்கின்றார்கள்.பெரும்பாலான சிங்கள சட்டத்தரணிகள் உள்ள நீதிமன்ற வளாகங்களில் அவர்கள் இருவரையும் சங்கத்தின் தலைவர்களாக நியமித்திருந்தமை அன்றைய சமூகத்தில் காணப்பட்ட ஒற்றுமை, விட்டுக்கொடுப்பு என்பவற்றை சரியாக புரிந்துகொள்ள முடியும்.

விசேடமாக சட்டத்தரணி ஹாசிம் அவர்கள் கேகாலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தில் தலைவராக 30 வருடங்கள் சேவையாற்றியுள்ளமை விசேடமான ஒரு விடயமாகும். எனது தந்தையும் சட்டத்தரணி ஹாசிம் அவர்களும் தொழில் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் செயற்பட்டாலும் தாம் பிறந்த ஊர் மற்றும் ஊர் மக்களுடன் மேற்கொண்ட நெருங்கிய தொடர்புகள் குறித்து இருவரும் செயற்பட்ட விதம் மேன்மையானதாக இருக்கின்றது. 

சட்டத்தரணி ஹாசிம் அவர்கள் இஸ்லாமிய வழிமுறைகளுடன் செயற்பட்டவர். தமது ஊரான கிருங்கதெனிய பள்ளி வாயலின் நிருவாக சபைத் தலைவராக தொடர்ந்தும் செயற்பட்டு வந்துள்ளார். 

ஹாசிம் அவர்களும் எனது தந்தையும் இஸ்லாமிய வழிமுறைகளுடன் வாழ்க்கையை முன்னெடுத்தவர்கள் என்பது இருவருக்கும் இடையில் காணப்படுகின்ற இன்னுமொரு நெருங்கிய தொடர்பாக காணலாம். எனது தந்தையும் அவரும் தமது பள்ளிவாயல்களின் நிருவாக சபையின் தலைவர்களாக இறுதி மூச்சு வரை செயற்பட்டுள்ளார்கள். அன்றை காலத்தில் ஸஹிராக் கல்லூரியை அரசாங்கம் கையகப்படுத்திய சந்தர்ப்பத்தில் ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணராக இருந்த சட்டத்தரணி ஏ.சி.எம் அமீர் அவர்களும் சட்டத்தரணி ஹாசிம் அவர்களும் எனது தந்தையும் சட்டத்தரணி செயட் அஹமட் அவர்களுடன் இணைந்து ஸாஹிராவின் பழைய மாணவர்களை இணைத்துக்கொண்டு ஸாஹிராக் கல்லூரியை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு முன்னெடுத்த போராட்டம் எனக்கு நினைவுக்க வருகின்றது. 

இதேபோன்று எனது மாணவப் பருவம் முதல் இன்று வரை அவருடைய வரலாற்றில் இருந்து பல்வேறு விடயங்களை கற்றுக்கொள்ளக்கூடிய பல விடயங்கள்  இருக்கின்றன.

காலம் இடம்கொடுக்காததனால் எனது கருத்துக்களை சுருக்கிக்கொள்ள வேண்டியுள்ளது. டொக்டர் எம்.சி.எம் கலீல் அவர்களுக்குப் பின் முஸ்லீம் லீக்கிற்கு சட்டத்தரணி ஹாசிம் அவர்களே தலைமைத்துவத்தை வழங்கினார்கள். அதன் ஊடாக நாடு முழுவதும் உள்ள முஸ்லிம் மக்களின் தேவைகள், பிரச்சினைகள், என்பன தலைமை அலுவலகத்திற்கு கிடைக்கின்ற போது அது தமது பிரச்சினையாக கருதி வடக்காக இருந்தாலும் சரி கிழக்காக இருந்தாலும் சரி எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகள் தொடர்பில் சரியான முறையில் ஆராய்ந்து அவற்றைத் தீர்க்கும் முகமாக தமது காலத்தையும் நேரத்தையும் நிதியையும் செலவிட்டு அந்தப் பகுதிகளுக்கு நேரடியாக சென்று ஆராய்ந்து பிரச்சினைகளை தீர்த்து அவர்கள் வழங்கிய சேவையை நான் இந்த சந்தர்ப்பத்தில் நினைவு கூருகின்றேன். 

அதே போன்று கேகாலை மாவட்டத்தில் உள்ள பௌத்த விகாரைகளின் வளர்ச்சிக்காகவும் அங்குள்ள பௌத்த பாடசாலைகளின் அபிவிருத்திக்காகவும் மயானங்களின் அபிவிருத்தி போன்ற பொதுச் சேவைகளுக்காக அவர் தனக்கு சொந்தமான காணிகள் மற்றும் நிதியை வழங்கி அவர் மேற்கொண்ட சேவை தொடர்பில் அந்தப் பிரதேசத்தில் உள்ள பெரியோர்கள் இன்று நினைவுபடுத்துகின்றார்கள். அவருடைய வாழ்க்கைக்கு பெரிதும் உறுதுணையான இருந்த அவர்களின் மனைவி எமது மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் களுத்தறை மாவட்டத்ததைச் சேர்ந்த வெயாங்கல்ல கிராமத்தைச் சேர்ந்தவர். ஹாசிம் அவர்களின் மாமனார் அவர்கள் அன்றைய காலத்தில் ரப்பர் கிங் என்று அழைக்கப்பட்டார்கள். அந்தளவுக்கு இறப்பர் தோட்டங்கள் அவருக்கு இருந்தன. அன்றைய காலத்தில் இருந்த முன்னணி கொடையாளி. அவர்களின் புதல்வர்களும் எனது தந்தையும் பாடசாலை நண்பர்கள். அவர்கள் பாடசாலைக் காலத்தில் மேடையேற்றி நாடகங்களை வருடந்தோரும் அவர்களின் தோட்ட பங்களாக்களில் மேடையேற்றி பொழுதைக்களிக்கின்ற விதம் தொடர்பில் நான் கேள்விப்பட்டிருக்கின்றேன். 

ஹாசிம் அவர்கள் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்கள். கண்டி வீதியில் உள்ள அவருக்கு நொந்தமான தேட்ஸ் எயிட் உணவகம் எனது நினைவுக்கு வருகின்றது. நாம் கண்டிக்கு செல்லும் போது பகலுணவுக்காகவோ அல்லது தேநீர் அருந்துவதற்கோ அந்த இடத்தில் எமது வாகனத்தை நிறுத்துவோம். பகலுணவுக்காக அந்த உணவகத்திற்கு சென்ற பல சந்தர்ப்பங்களில் சட்டத்தரணி ஹாசிம் அவர்கள் அங்கு பகலுணவை சாப்பிட்டுக்கொண்டிருக்கின்ற பல சந்தர்ப்பங்களை நான் கண்டிருக்கின்றேன். அந்த உணவகத்தின் உரிமையாளர் அங்கே உணவருந்தவது தொடர்பில் அங்க வந்து செல்கின்றவர்களுக்கு அந்த உணவகம் தொடர்பில் சிறந்த நம்பிக்கை ஏற்படுகின்றது. 

அவர் அரசியல் ரீதியில் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்ளாவிட்டாலும் தமது அரசியல் கொள்கை மக்கள் நலன் என்பவற்றை கருத்திற்கொண்டு அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார். அவருடைய சகோதரர் சட்டத்தரணி யூசுப் அவர்களும் இந்த சமூகத்திற்கு பாரிய சேவைகளை வழங்கியுள்ளார். இன்று பாராளுமன்ற பிரதிநித்துவத்தைப் பெற்றுக்கொண்டுள்ள எனது நண்பர் கபீர் ஹாசிம் அவர்களைப் போன்று அந்தப் பகுதி மக்களிடையே நன்மதிப்பைப் பெற்ற கயாம் அவர்களும் எமது சமூகத்திற்கு மேற்கொண்டுள்ள சேவைகளை பாராட்ட வேண்டும். அவர்களுக்கு ஜன்னதுல் பிர்தவ்ஸ் எனும் உயர்ந்த சுவர்க்கத்தை வழங்க வேண்டும் என்ற பிராத்தனையோடு எனது கருத்துக்களை முடிவுக்கு கொண்டு வருகின்றேன்.

No comments

Powered by Blogger.