Header Ads



காணி விடுவிப்பும், முஸ்லிம்களை ஏமாற்றும் Mp க்களும்

2020.12.03 ஆம் திகதி வன ஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சிற்கு கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் முசர்ரப் லகுகல பொத்துவில் பகுதியிலுள்ள 450 ஏக்கர் காணியினை விடுவிக்க கோரி குறித்த அமைச்சின் குழு கூட்டத்தில் வேண்டுகோளொன்றை முன்வைத்திருந்தார்.

அவ்வேண்டுகோளுக்கமைவாக அக்குழு கூட்டத்தில் குறித்த விடயம் தொடர்பாக கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் முசர்ரப் அவர்களுக்கு குழுவொன்றை நியமித்து அறிக்கையொன்றை வழங்குவதற்காக வன பாதுகாப்பு நாயகத்திற்கு வழங்கட்ட ஆலோசைனையின் பேரில் வன ஜீவராசிகள் அமைச்சின் குழு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு குறித்த பிரதேசத்திலுள்ள காணிகளை விடுவிக்குமாறு கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் வேண்டுகின்றார் ஆனால் 1956 ஆம் ஆண்டு வழங்கப்பட்டதாக ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட இக்காணிகள் 2006 ஆம் ஆண்டு வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு சொந்தமாக்கப்பட்டதாக வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது ஆகவே இக்காணிகள் குறித்த நிலைபாட்டினை வழங்குமாறு அரசாங்க அதிபருக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.

இக்கடிதத்தை மாத்திரம் வைத்துக்கொண்டு காணிகளை விடுவித்ததாக மக்களை ஏமாற்றுவது காலா காலமாக பல பாராளுமன்ற உறுப்பினர்கள் செய்த அதே விடையத்தை இவரும் செய்கிறார் என்பதில் ஆச்சரியமில்லை.

கெரவ பாராளுமன்ற உறு
ப்பினர் பைசால் காசிம் அவர்கள் கூட இவ்வாறு வன ஜீவராசிகள் அமைச்சின் குழுக் கூட்டமொன்றில் விடுத்த வேண்டுகோளுக்கமைய வன ஜீவரசிகள் அமைச்சின் குழு நேரடியாக பொத்துவில் பிரதேச செயலகத்தில் கூட்டமொன்றை நடத்தி அறிக்கைகளை தயாரித்து இறுதியாக வன ஜீவராசிகள் திணைக்களத்தினதும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரினதும் பரிந்துரை யாதெனில் தற்போது குறித்த காணிகளில் காடுகள் இருப்பதாகவும் அவ்வாறு காணிகளை விடுவிப்பதாகவிருந்தால் காடுகளை அழித்தே காணிகளை விடுவிக்க நேரிடும் என்பதால் குறித்த வனப்பிரதேசத்தை பாதுகாக்க வேண்டுமென்ற அடிப்படையில் இக்காணிகளை விடுவிக்க முடியாதென அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு பல முறை இதே போன்ற செயற்பாடுகளை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் செய்திருந்தார்கள் அதனை விமர்சித்து தேர்தல் மேடைகளில் கூச்சலிட்டவர்கள் மக்களை மடையர்களாக்கும் அதே பானியில் பயணிப்பது வேடிக்கையாக இருக்கின்றது.

இக்காணிகளை கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் முசர்ரப் அவர்கள் சொல்வது போன்று விடுவிக்கப்பட்டிருந்தால் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் இக்காணிகளை விடுவிக்க கோரி வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு சமர்ப்பித்த பரிந்துறை அறிக்கையை மக்கள் மத்தியில் காட்ட முடியுமா?

அதே போன்று வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் வன ஜீவராசிகள் அமைச்சின் குழுவிற்கு அரசாங்க அதிபரின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதா?

அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம் குறித்த காணிகளை விடுவிக்க அக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளதா?

அவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தால் குறித்த அமைச்சர் அல்லது அமைச்சு வர்த்தமானி பிரசுரித்துள்ளதா?

இவை அனைத்திற்கும் இல்லை என்பதே பதிலாக அமைகின்றது.

எனவே ஒரு அரசாங்க அதிபரின் அறிக்கையினை கோரி அமைச்சிலிருந்து வந்த கடிதத்தை வைத்துக் கொண்டு தான் காணிகளை விடுவித்ததாக கபட நாடகமாடி மக்களை ஏமாற்றுவதன் நோக்கம்தான் என்ன?

காலா காலமாக இக்கானிகளை விடுவிப்பதாக கூறி அரசியல் செய்த பல எம்பிமார் பட்டியலில் முசர்ரப் எம்பியும் இடம்பிடித்துள்ளார் என்பது அவருடைய சாதனையே.

இவ்வாறு மக்களை மடையர்களாக்கும் முயற்சிகளை கைவிட்டுவிட்டு இக்காணிகளை விடுவித்தற்கான வர்த்தமானி பிரசுரத்தை கையில் வைத்துக் கொண்டு தனது அரசிலை முன்னெடுப்பதே சிறந்தது. அதை விட்டுவிட்டு இன்னுமின்னும் மக்களை மடையர்களாக்கும் முயற்சியில் ஈடுபடுவார்களாவிருந்தால் அவர்களது அரசியலின் இறுதி கட்டத்தில் இருப்பதாக உணர்ந்து கொள்ளட்டும்.

-முஹம்மட் தம்பி முஹம்மட் றிம்ஸான்


1 comment:

  1. ippadiyana seythikalai neengal pirasurikka vendam

    ReplyDelete

Powered by Blogger.