Header Ads



கார்பெட் இட்டு வீதிகளை நிர்மாணிப்பதற்கு முன், ஏழைகளுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் - கீதா Mp


கார்பெட் இட்டு வீதிகளை நிர்மாணிப்பதற்கு முன்னர், நாளொன்றுக்கு ஒரு வேளை உணவை மாத்திரம் உண்ணக் கூடிய ஏழை மக்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க, பாராளுமன்றத்தில் இன்று (20) தெரிவித்தார்.

ஒரு நாளில் ஒரு வேளை உணவை மட்டுமே தேடிக்கொள்ளும் அப்பாவி மக்கள் இருப்பதாகவும், அவர்களுக்கு குறைந்தபட்சம் மூன்று வேளை உணவு வழங்குவதற்கு அரசாங்கம் ஏதாவது செய்ய வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வீதிகளை அமைத்து, கார்பெட் போடுவது நல்லது. ஆனால், அதற்கு முன், அவர்களின் பசியைப் போக்க ஏதாவது செய்ய வேண்டும் என்றார்.

மேலும், வரவு - செலவுத் திட்டத்தில் பெண்களுக்கு 3% மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பெண்கள் மீது அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் பாராளுமன்ற குறிப்பிட்ட அவர், நாட்டில் உள்ள வாக்காளர்களில் 52% பெண்கள் என்றும் அவர் நினைவுபடுத்தினார்.

1 comment:

  1. பெரியதொரு கண்டுபிடிப்பைச் செய்திருக்கும் இந்த நபர் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்துக்கு வேந்தராக நியமிக்கும் தகுதிபடைத்தவர் போல் தெரிகின்றது.

    ReplyDelete

Powered by Blogger.