Header Ads



சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள நாகேந்திரன் தர்மலிங்கம் - ஹலிமா யாக்கூப்பிடம் கொடுத்த மனுவும் நிராகரிப்பு


சிங்கப்பூரில் ஹெரோயின் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட நாகேந்திரன் கே தர்மலிங்கத்தின் மரண தண்டனையை நீக்குமாறு மனு பிரச்சாரமொன்று தொடங்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்பை வலியுறுத்தும் வகையில், மனித உரிமைகள் குழுவான எம்னெஸ்டி இன்டர்நேஷனல் மலேசியா இயங்கலை மனு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.

42.72 கிராம் ஹெரோயின் கடத்தியதற்காக, நாகேந்திரன் கே தர்மலிங்கம் என்பவருக்கு கடந்த 2010-ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இதற்கமைய,நவம்பர் 10 ஆம் திகதி அவருக்கான மரண தண்டனை திட்டமிடப்பட்டுள்ள நிலையில்,அதற்கு பல எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

“மனித உயிரை எடுப்பது ஒரு கொடூரமானச் செயல், ஆனால் போதைப்பொருள் கடத்தியதற்காக மட்டுமே தண்டனை பெற்ற ஒருவரைத் தூக்கிலிடுவது, அதுவும் அவர் என்ன நடந்தது என்பதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத நிலையில் உள்ளார் என்ற சான்றுகளுக்கு மத்தியில், இது வெறுக்கத்தக்கது,” என்றும்,குற்றம் செய்தபோது நாகேந்திரன் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார் என்ற செய்திகளையும் அக்குழு கூறியுள்ளது.

தண்டனையை முற்றிலுமாக இரத்து செய்வதற்கான நடவடிக்கையாக, அனைத்து மரண தண்டனைகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த குழு அழைப்பு விடுத்துள்ளது.

எம்னெஸ்டி இன்டர்நேஷனல் தனது இணையதளம் மூலம், தண்டனையைக் குறைக்கவும், மரணதண்டனையை நிறுத்தவும் கோரி ஹலிமாவிடம் முறையீடு செய்யுமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

சிங்கப்பூர் உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், நாகேந்திரன் குற்றத்தைச் செய்யும்போது மனநலக் கோளாறுகளால் பாதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், நாகேந்திரன் அறிவுசார் செயல்பாடு பிரச்சினைகள் மற்றும் அதிவேகத்தன்மை மற்றும் கவனக்குறைவு கோளாறு (ADHD) ஐ.கியூ. மதிப்பெண் 69 மட்டுமே மற்றும் பலவீனமான செயல் திறன் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்ப வழக்கறிஞர் கூறியுள்ளார்.

இதுவரை 54,000 -க்கும் மேற்பட்ட கையெழுத்துகளைப் பெற்று நாகேந்திரனை மன்னிக்குமாறு ஹலிமாவை வலியுறுத்துவதற்காக இயங்கலையில் மற்றொரு மனு பிரச்சாரம் தொடங்கப்பட்டது. எனினும், மன்னிப்பு கோரி ஹலிமாவிடம் கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வமான மனு வெற்றி பெறவில்லையென்றும் கூறப்படுகின்றது.   Twin

3 comments:

  1. மனிதகுல எதிரிகளான மோடி போன்ற வர்கள் உலக தலைவர்கள் ஆஹ வந்துஉள்ளதே மிக பெரிய மனித உரிமை மீறல். இதையடுத்து நிறுத்த வக்கில்லாத அமைப்பு களுக்கு முதலில் தடை விதிக்க வேண்டும்.

    ReplyDelete
  2. சிங்கப்பூர் சட்டத்தைச் சரியாகவும் நேர்மையாகவும்,உறுதியாகவும் நிறைவேற்றும் காரணத்தால் தான் இன்று முதலாம் உலகை நோக்கிப் பயணமாகின்றது. சிங்கப்பூரின் சிறப்பு, சட்டத்தை அந்தநாடு சரியாக நிறைவேறறும் அதன் உறுதிப்பாட்டில் தங்கியுள்ளது. இல்லாவிட்டால் சட்டத்தைக் கையில் எடுத்து குரங்கின் கையில் பூமாலை போல் இயங்கி அழிவை நோக்கி மிக வேகமாக படுபாதாளக்குழியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் இலங்கையின் நிலையிலேயே சிங்கப்பூரும் இருந்திருக்கும்.

    ReplyDelete
  3. சிங்கப்பூர் சட்டத்தைச் சரியாகவும் நேர்மையாகவும்,உறுதியாகவும் நிறைவேற்றும் காரணத்தால் தான் இன்று முதலாம் உலகை நோக்கிப் பயணமாகின்றது. சிங்கப்பூரின் சிறப்பு, சட்டத்தை அந்தநாடு சரியாக நிறைவேறறும் அதன் உறுதிப்பாட்டில் தங்கியுள்ளது. இல்லாவிட்டால் சட்டத்தைக் கையில் எடுத்து குரங்கின் கையில் பூமாலை போல் இயங்கி அழிவை நோக்கி மிக வேகமாக படுபாதாளக்குழியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் இலங்கையின் நிலையிலேயே சிங்கப்பூரும் இருந்திருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.