Header Ads



கைத் தொலைபேசியுடன் கொழும்பு, வைத்தியசாலையில் ரஞ்சன் ராமநாயக்கா கைது


வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, அலைபேசி மற்றும் ஹேண்ட் ஃப்ரீயுடன் (கேள்கருவி) கைது செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது.  

அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்க, முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் எலும்பு மூட்டு பிரிவில் அனுமதிக்கப்படுவதற்காக கடந்த 10ஆம் திகதியன்று, கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் கட்டுப்பாடு மற்றும் புனர்வாழ்வு பிரிவின் ஆணையாளர் ஜெனரல் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.   

சிகிச்சைக்காக தடுத்து வைக்கப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க, நேற்று  (21) இரவு 10.00 மணியளவில் சிறைச்சாலை வைத்தியசாலையில் கடமையாற்றும் சிறைச்சாலை அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது மேற்குறிப்பிட்ட சாதனங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.  

சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தின் 78ஆவது பிரிவின் கீழ் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு  கொண்ட சிறைத் தீர்ப்பாயத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய குழாம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என்றும் சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

No comments

Powered by Blogger.