Header Ads



தற்போதைய அமைச்சரவை சட்டவிரோதமானதென உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றில் மனு


ஜனாதிபதியினால் தற்போதைய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளமை சட்டவிரோதமானது என அறிவித்து அதன் செயற்பாடுகளை கைவிடுமாறு தடை உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

தொழிற்சங்கவியலாளர்களின் தேசிய முன்னணியின் செயலாளர் கபில ரேணுகவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தற்போது அமைச்சரவைக்கான அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளமையானது அரசியலமைப்பின் 47-1-அ மற்றும் ஆ சரத்துக்களுக்கு முரணானது எனக் குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதன் பிரதிவாதிகளாக அமைச்சரவை, சகல இராஜாங்க அமைச்சர்கள், ஜனாதிபதி செயலாளர் மற்றும் நிதியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட 82 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.


1 comment:

  1. இது போன்ற வழக்குகள்ன் முடிவுகள் வாதிக்குச் சார்பாக அமையும் என்பது வெறும் மனக்ேகாட்டையைத் தவிர வேறு எதுவும் புதிதாக எதிர்பார்க்க முடியாது.

    ReplyDelete

Powered by Blogger.