Header Ads



வெளிநாட்டு தொழில்வாய்ப்பு மோசடியில் சிக்க வேண்டாம் - பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்


வெளிநாட்டு தொழில்வாய்ப்புகளை பெற்றுத் தருவதாகக்கூறி நிதி மோசடியில் ஈடுபடுகின்றமை தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

ஜப்பான், தென்கொரியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் தொழில்வாய்ப்புகளுக்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் முன்னெடுக்கப்படும் ஆட்சேர்ப்புக்கு அமைவாக தொழில்களைப் பெற்றுத் தருவதாகக்கூறி இந்த மோசடி இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கொரியாவிற்குத் தொழில்வாய்ப்புகளுக்காக உள்வாங்கும் மற்றும் பயிற்சியளிக்கும் பணிகள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் மாத்திரம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், ஜப்பான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் தொழில்வாய்ப்புகள் வழங்கப்படுவதானது, இரு நாடுகளுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள உடன்படிக்கைகளுக்கு அமைய, அனுமதி வழங்கப்பட்ட தொழில் நிறுவனங்கள் ஊடாக மாத்திரமே ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என அந்தப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

எனவே, இது தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

No comments

Powered by Blogger.