Header Ads



பொருட்களின் விலைகள் அதிகரிக்கும், மக்கள் வாழப் பழக வேண்டும் - எஸ்.பி.


பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் பொதுமக்கள் அந்த விலை அதிகரிப்புடன் தொடர்ந்தும் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்பாராத சூழ்நிலையால் முழு உலகமும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கின்றது இது இலங்கை மாத்திரம் எதிர்கொள்ளும் நிலைமையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

பலமாதங்கள் நாட்டை முடக்கி வைத்ததன் மூலம் அரசாங்கம் தங்களை காப்பாற்றியது என்பதை மக்கள் மறக்க கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

முடக்கல் காரணமாக பல கோடி இழப்பு ஏற்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் விலைகள் அதிகரிக்கலாம், பொருளாதாரம் வளர்ச்சியடைவதற்கு மக்கள் இன்னமும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தை அனைத்துக்கும் குற்றம் சொல்லாமல் மக்கள் கஷ்டங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. people have to learn for live or die?

    ReplyDelete
  2. இவருடைய பேச்சு நடத்தைகள் தான் அங்கொட வைத்தியசாலையில் 100 வருடங்கள் நிரந்தரமாக சிகிச்சைக்கு உடனடியாக உற்படுத்தப்படவேண்டியவர் என்பதை தௌிவாகக் காட்டுகின்றது. உரிய அதிகாரிகள் ஏன் மௌனம் சாதிக்கின்றனர் என்பதுதான் பெரிய புதிராக இருக்கின்றது.

    ReplyDelete

Powered by Blogger.