Header Ads



அரச பணியாளரகளை பசில் இழிவுப்படுத்த இல்லை, அவர்களின் சேவையை மதிக்கின்றார், சுமை எனக் கூறவில்லை


நிதியமைச்சர் பெசில் ராஜபக்‌ஷ, அரச பணியாளர்களை சுமை என தவறாக கூறவில்லை எனத் தெரிவித்த அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான டலஸ் அழகப்பெரும, அந்த அறிவிப்பை மீண்டுமொரு தடவை பார்க்குமாறும் ஒவ்வோர் அரசாங்கத்தின் காலக்கட்டத்திலும் செய்யப்பட்ட தவறு குறித்தே அவர் தெரிவித்தார் என்றார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் (16) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை

அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், அதாவது ஆட்சியாளர்கள் அரசியல் தீர்மானங்களை எடுத்துக்கொண்டு வாக்குகளுக்காக எந்தவொரு கட்டுப்பாடும் இன்றி அரச நிறுவனங்களை நிரப்புகின்றனர்.

இந்த நாட்டின் அரசியல் கலாசாரம் என்பது மிகவும் மோசமானது. மாறி மாறி ஆட்சியமைக்கும் அரசாங்கம் மற்றும் அமைச்சர்கள் அரச நிறுவனங்களை பணியாளர்களால் நிரப்புவதற்கு எடுக்கும் முயற்சியால் அரச நிறுவனங்கள் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளன. எனவே,இந்த சுமை குறித்தே நிதியமைச்சர் தெரிவித்தார்.

அரச பணியாளரகளை இழிவுப்படுத்தவும் இல்லை. அவர்களின் சேவையை மதிக்கின்றார்.

ஆசிரியர்- அதிபர்களின் 24 வருட பிரச்சினை நிறைவு செய்யப்பட்டுள்து. அவர்களது சம்பள

அதிகரிப்பு வழங்கப்படவுள்ளது. எனவே, அரச ஊழியர்களிடத்திலே அரசாங்கத்துக்கு நல்ல ஆர்வம் உள்ளது என்றார்.

மகேஸ்வரி விஜயனந்தன்


No comments

Powered by Blogger.