Header Ads



அரசாங்கத்தின் பங்காளியாக நாம் இருந்தாலும், தீர்மானங்கள் அனைத்துக்கும் ஆதரவளிக்க வேண்டிய கட்டாயம் இல்லை


தீர்மானங்கள் எடுக்கும் இடத்தில் நாம் இல்லை எனத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டின் தற்போதைய நிலையில் எவராலும் தனித்து செயற்பட முடியாது. அரசாங்கத்தின் பங்காளியாக நாம் இருந்தாலும் அரசாங்கத்தின் தீர்மானங்கள் அனைத்துக்கும் ஆதரவளிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. அவர்கள் கூறும் அனைத்தையும் கேட்பதற்கு அவர்கள் எமது சிறிய தந்தை அல்ல என்றார்.

பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர், ஊடகங்களுக்கு

கருத்து தெரிவிக்கையிலேயே, மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர்,

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலே, பொருள்களின் விலையேற்றத்துக்கு காரணமாகும்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி என்ற ரீதியில் அரசாங்கத்துடன் பல முறை நாம்

கலந்துரையாடியுள்ளோம். கடிதம் மூலமும் அறிவித்துள்ளோம். அரசாங்கத்திடம் காரணங்களை முன்வைப்பது மாத்திரமே எமது பொறுப்பு.

இந்த கலந்துரையாடல்களின் போது, மக்கள் படும் அவஸ்தை, துயரம், வறுமை போன்றவை

குறித்து போதுமானளவு நாம் உரையாடியுள்ளோம். எனவே, இதற்கான தீர்வை அரசாங்கமே

எடுக்கவேண்டிய உள்ளது.

பொதுவாக கலந்துரையாடல்களில் தீர்மானங்களை எடுப்பது நாமல்ல எனத் தெரிவித்த அவர்,

இந்த விடயத்தில் சிறந்த தீர்மானங்களை எடுத்து மக்களைப் பாதுகாப்பதற்கான நிவாரண

சலுகைகளை வழங்க வேண்டும்.

மேலும் கொரோனா குறைவடைந்துள்ளதால் நாடுபூராகவும் சென்று கட்சியை மறுசீரமைத்து,

பலப்படுத்தும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளோம். தெளிவாக நாட்டுக்குள நாட்டை நேசிக்கும் நேர்மையான ஊழல், மோசடியற்ற மக்கள் நம்பிக்கையை வென்ற ஜனநாயகத்தை மதிப்பவர்களுடன் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம்.

சீன உர கப்பல் தொடர்பில் இலங்கை நிபுணர்கள் கூறுவதை அரசாங்கம் கடைப்பிடிக்க

வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு எனத் தெரிவித்த அவர், இந்த விடயம் தொடர்பில் ,விவசாய நிபுணர்கள், சுற்றாடல் நிபுணர்கள் என பலர் எமது நாட்டில் உள்ளனர்.அவர்களின் நிலைபாட்டுக்கு அமையவே அரசாங்கம் செயற்பட வேண்டும் என்றார்.

No comments

Powered by Blogger.