Header Ads



நாட்டை விற்க வேண்டும் என்றால், மக்களுடன் சேர்ந்தே விற்க வேண்டும் - சஜித்


நாட்டை விற்க வேண்டும் என்றால் மக்களுடன் சேர்ந்தே விற்க வேண்டும் என்று மக்கள் கோரும் அளவிற்கு தற்போதைய அரசாங்கம் நாட்டை பாதாளத்தில் தள்ளியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தேசிய சொத்துக்களையும்,தேசிய வளங்களையும் அற்ப நோக்கங்களுக்காக விற்று இந்த நாட்டை ஒரு ஏல நாடாக அரசாங்கமே மாறியுள்ளதாகவும் நாட்டைக் காப்பாற்ற இந்த நாட்டு மக்கள் முன்நிற்பார்களா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டிய தருணம் வந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கொலன்னாவ தேர்தல் தொகுதியின் பிரதம அமைப்பாளரும்,ஐக்கிய மக்கள் சக்தியின் இணை ஊடகப் பேச்சாளருமான எஸ்.எம்.  மரிக்கார் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (04) கலந்துகொண்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் இணை ஊடகப் பேச்சாளர் மனுஷ நாணயக்காரவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

தற்போதைய அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளால் நாடளாவிய ரீதியில் மக்கள் விரக்தியில் உள்ளதாகவும், தாங்கள் சுதந்திரமாக வாழக்கூடிய நாட்டை உருவாக்குமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

மக்களின் இன்னல்களைப் போக்குவதற்காக எதிர்வரும் 16 ஆம் திகதி கொழும்பில் பாரிய மக்கள் பேரணியொன்றை மேற்கொள்ளத் தயார் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அந்த மக்கள் பலத்தின் ஊடாக இந்த நாட்டில் பொது மக்கள் சார் அரசாங்கம் ஒன்று உருவாகும் என்றும் அவர் கூறினார்.


No comments

Powered by Blogger.