Header Ads



பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலிலிருந்து, புலிகள் இயக்கத்தை நீக்க முடியாது - ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் அறிவிப்பு


ஐரோப்பாவின் சர்வதேச பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலிலிருந்து, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை நீக்குமாறு முன்வைக்கப்பட்ட மனுவொன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பயங்கரவாத அமைப்பு என ஐரோப்பிய ஒன்றிய பிராந்தியத்தில் விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவே இவ்வாறு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம்  நிராகரித்துள்ளது. 

டென்மார்க்கை அடிப்படையாகக் கொண்ட விடுதலைப்புலிகளின் அரசியல் தரப்பினர் இந்த மேன்முறையீட்டை செய்திருந்தனர்.

இந்நிலையில், குறித்த மேன்முறையீட்டை நிராகரித்த நீதிமன்றம், சட்ட செலவுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் செலவுகள் ஆகியவற்றை செலுத்துமாறும் உத்தரவிட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தினால் முதன் முதலாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு கடந்த 2006 ஆம் ஆண்டில் தடைப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.  

10 ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் ஆயுத போராட்டம் தோற்கடிக்கப்பட்டாலும் அந்த அமைப்புக்கு நிதி சேகரிப்பு மற்றும் மீள் உருவாக்கத் திறன் இன்னும் இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் கடந்த 2019 ஆம் ஆண்டு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரியில் ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் அமைப்பைப் பயங்கரவாத அமைப்புப் பட்டியலில் மீண்டும் சேர்த்தது. 

இதனை நீக்குமாறு கோரி இந்த மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவினை ஐக்கிய இராச்சியம் மற்றும் வட அயர்லாந்தும் ஏற்றுக்கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2 comments:

  1. Super. உலகமே ஏற்றுக்கொண்ட பயங்கரவாத போதைபொருள் கடத்தல் கும்பலான புலி கூட்டத்தின் செய்யறப்பாடுகளை இலங்கையில் புலிகளின் எச்சைகள் மீள் எழுச்சிகுப்படுத்தும் பொழுது இலங்கை அரசு கையாலாகாமல் பார்ப்பது தான் வேடிக்கை

    ReplyDelete
  2. அடேய் NGK ! உங்கள் ஆட்கள் ISIS , Taliban தான் போதை பொருள் கடத்தும் இழிவான உலக பயங்கரவாதிகள்

    ReplyDelete

Powered by Blogger.