Header Ads



அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொண்டு மீண்டும் முன்னோக்கி வருமாறு இளைஞர், யுவதிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு


தாம் ஆட்சிக்கு வந்த சந்தர்ப்பத்தில் ஓவியங்களை வரைந்த, தரிசு நிலங்களில் பயிர்ச்செய்த இளைஞர், யுவதிகளை மீண்டும் முன்வருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் நிர்மாணிக்கப்பட்ட 1,500 வீதிகள் இன்று(06) திறந்துவைக்கப்பட்டன.

இதன் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில், வீரகெட்டியவில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொண்டு மீண்டும் முன்னோக்கி வருமாறு இளைஞர், யுவதிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

விவசாயத்தில் ஈடுபட அச்சமடைய வேண்டாம். ஒரேடியாக உரப்பாவனையை மாற்றுவது பாரிய சவாலாகும்.

எனினும் புரட்சிகர மாற்றத்தை நிச்சயமாக ஏற்படுத்துவோம் என்பதில் உறுதியாக உள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. ஆம் இளைஞர்களே, நாட்டை முன்னேற்றுவோம் வாருங்கள். கேஸ் விலை அதிகரிப்பது,சீனி விலைஅதிகரித்து சந்தையில் சீனி இல்லை, சீமெந்து விலைஅதிகரித்து தட்டுப்பாடு, இரசாயனப்பசளைகள், கிருமிநாசினி,களைநாசினி இறக்குமதி தடை, போன்ற எதுவும் நாட்டை முன்னேற்றத்தடையாக அமையாது. வாருங்கள் முன்னேற்றுவோம்.கடந்தகால பொருளாதாரப்பிரச்சினை, தற்போதைய பொருளாதார நெருக்கடி அனைத்தையும் அடியோடு மறந்து விடுங்கள். நாட்டை முனனேற்ற அவைகள் தடையாக அமையாது.

    ReplyDelete

Powered by Blogger.