Header Ads



சிலிண்டர்களில் இருந்து வெளியேறும் பல குமிழ்கள் - காரணம் கேட்டால் கையை விரிக்கும் கடைக்காரர்கள்


சிலிண்டர்கள் தீப்பற்றல், காஸ் அடுப்புகள் வெடித்துச் சிதறுதல் மற்றும் காஸ் அடுப்பையும், சிலிண்டர்களையும் இணைக்கும் குழாய்கள் வெடித்துச் சிதறுதல் என பல அனர்த்தங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், புதிதாகக் கொள்வனவு செய்யும் சிலிண்டர்களை திறந்தவுடன் பல குமிழ்கள் ஒரே நேரத்தில் வெளியே வருகின்றன.

புதிதாக கொள்வனவு செய்யும் காஸ் சிலிண்டர்களை வீடுகளுக்கு கொண்டுச் செல்லும் நுகர்வோர்,  சீலை கழற்றி மூடியை திறந்தவுடன் இவ்வாறு குமிழ்கள் நிரம்பிக்கொள்கின்றன.

இதுதொடர்பில், காஸ் சிலிண்டர்களைக் கொள்வனவு செய்த கடை உரிமையாளர்களிடம் தெரிவிக்கும் போது, தங்களால் ஒன்றும் செய்யமுடியாது. இவ்வாறான சிலிண்டர்களை மீளவும் பெற்றுக்கொள்ளுமாறு நிறுவனங்கள் தங்களுக்கு அறிவுறுத்தவில்லை என கையை விரித்துவிடுகின்றனர் என நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

No comments

Powered by Blogger.