November 20, 2021

கலாபூஷணம் ஜே. எம். ஹாபீஸ், மத்தியஸ்த சபை உறுப்பினராகத் தெரிவு


மடவளை பஸாரைச் சேர்ந்த கலாபூஷணம் ஜே. எம். ஹாபீஸ், பாத்ததும்பறை பிரதேச மத்தியஸ்த சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனத்தை நீதி அமைச்சின் கீழுள்ள மத்தியஸ்த  சபை ஆணைக்குழு வழங்கியுள்ளது.(15)

பேராதனை பல்கலைக் கழகப் பட்டதாரியான இவர் ஓய்வு பெற்ற ஆசிரியரும் அகில இலங்கை சமாதான நீதவானுமாவார் , அரச கரும மொழிகள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட மொழி பவிற்றுவிப்பாளருமாவார்.  ஊடகவியலாளரான இவர் ஓய்வு பெறுவதற்கு முன் தேசிய கல்வி  நிறுவகத்தின் தொலைக் கல்வி ஆசிரியர் பயிற்சி நெறி, மேலதிக மொழி விருத்திப்பாடநெறி, போன்ற பல நிகழ்ச்சித் திட்டங்களில் முக்கிய பதவிகள் பலவற்றை வகித்திருந்தார். பேராதனை ஆசிரியர் கல்லூரி, மகாவலி கல்விக் கல்லூரி போன்ற பலவற்றில் வருகைதரும் விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளார். வத்துகாமம் கல்விவலய, வலல ஆசிரியர் கல்வி நிலையத்தில் ஆசிரிய வளவாளராகவும் கடமையாற்றி ஓய்வு பெற்றவராவார்.      

மேற்படி மத்தியஸ்த சபை உறுப்பினர்களுக்கான நேர்முகப் பரீட்சை மற்றும் எழுத்து மூலப் பரீட்சை என்வற்றிவ் சித்தியடைந்ததன் மூலம் இவர் இப்பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment