Header Ads



அரசாங்கத்தில் இருந்து லங்கா சமசமாஜக் கட்சி விலகப் போகிறதா..?


லங்கா சமசமாஜக் கட்சி அரசாங்கத்தில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தின் பிரதான கூட்டணிக் கட்சியான சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் அரசாங்கத்தின் மக்கள் விரோத செயல்கள் குறித்து கலந்துரையாட சந்தர்ப்பத்தை கோரிய போதிலும் பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் அதற்கு எந்த பதிலையும் வழங்கவில்லை என திஸ்ஸ விதாரண ( Tissa Vitharana)   தெரிவித்துள்ளார்.

இப்படியான நிலைமையில், அரசாங்கத்தின் கீழ் கூட்டணியில் இருக்க கூடாது என்பது தனது நிலைப்பாடு எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனடிப்படையில், லங்கா சமசமாஜக் கட்சியின் அடுத்த அரசியல் சபைக் கூட்டத்தில் அரசாங்கத்தில் இருந்து விலகுவது தொடர்பான யோசனையை முன்வைக்க எதிர்பார்ப்பதாகவும் திஸ்ஸ விதாரண மேலும் தெரிவித்துள்ளார். IBC

No comments

Powered by Blogger.