Header Ads



அக்குறணை பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் எதிர்ப்பின்றி நிறைவேற்றம்


அக்குறணை  பிரதேச சபையின் ஆளும்  தரப்பினர் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் எதிர்ப்பின்றி வெற்றிபெற்றுள்ளனர். இம்முறை எதிர் தரப்பைவ் சேர்ந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள்  மூன்று பேர் ஆதரவாக வாக்களித்துள்ளனர். 

அக்குறணை  பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான (16ஆம் திகதி) வரவு செலவுத் திட்டத்திற்கு  பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள்  சபையில் கலந்து கொள்ளவில்லை

அக்குறணை  பிரதேச சபையின் தவிசாளர் இஸ்திஹர் இமாமுதீன்  வரவு செலவுத் திட்டத்தை சபையில் சமர்ப்பித்தார்.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 18 வாக்குகளும் எதிராக எந்த  வாக்குகளும் அளிக்கப்படவில்லலை. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  7 ஸ்ரீலங்கா  சுதந்திரக் கட்சி 4  சுயெச்சை அணி  4  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 2 மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1 ஆகிய கட்சிகளைப்  பிரதிநிதித்துவப்படுத்தும்  உறுப்பினர்கள்  வாக்களித்தனர். ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் 11 பேர் சமூகமளிக்கவில்லை. 

இம்முறை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 2 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1 முதலிய கட்சியைப்   பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக  வாக்களித்தமை விசேட அம்சமாகும்.

இக்பால் அலி

17-11-2021


No comments

Powered by Blogger.