November 21, 2021

அமைச்சரவையில் முஸ்லிம் பிரநிதித்துவம் இல்லாமல் போனால், எமது சமூகத்திற்கு பாரிய இழப்புகள் ஏற்படும் - அலி சப்றி


(அஷ்ரப் ஏ சமத்)

இந்த நாட்டில் உள்ள முஸ்லிம் தலைவா்களுள்  4 பேரை நம் சமூகம் ஒரு போதும் மறந்துவிட முடியாது அரசியல் விவேகத்தினாலும்  கல்வியினாலும்  சிந்தித்து  அவா்கள் எமக்கு ஆற்றிய சேவையை நம் சமூகம்  இன்றும்  அனுபவிக்கின்றோம். அவா்கள் எமது சமூகத்தின் கல்வி வளா்ச்சிக்காக பல சிந்தனைகளை வித்திட்டவா்கள்.   அறிஞா் சித்திலெப்பை,  கலாநிதி டீ.பி. ஜாயா, கலாநிதி ஏ.எம்.ஏ அஸீஸ், கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத்  ஆகிய தலைவா்கள்.  இத் தலைவா்கள் பற்றி எமது  இளைய சமூகத்தினா்கள்  அவா்கள் பற்றிய புத்தகங்களை தேடி வாசித்து அறிந்து கொள்ளல் வேண்டும்.  என நீதியமைச்சா் அலி சப்றி உரையாற்றினாா். 

அகில இலங்கை வை.எம்.எம். ஏ பேரவையின்   71ஆவது மாநாடு இலங்கை மன்றக் கல்லுாாியில் சனிக்கிழமை (20)  அதன் தேசியத் தலைவா் சகீட் எம். றிஸ்மி தலைமையில் நடைபெற்றது.  இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக நீதியமைச்சா் ஜனாதிபதி சட்டத்தரனி அலி சப்றி கலந்து கொண்டாா்.  அவர் அங்கு உரையாற்றும்போதே  மேற்கண்டவாறு தெரிவிததார். 

அமைச்சர்   அலி சப்றி  அங்கு  தொடா்ந்து உரையாற்றுகையில் -

உலகில் பெண்கள் சகல துறைகளிலும் முன்னேறியுள்ளாா்கள்.  அமேரிக்காவில்  கூட பெண்கள் கல்வியில் 58 வீதத்திலும் இலங்கையில் 62 வீதத்திலும் எமது நாட்டில் உள்ள  முஸ்லிம் சமூகத்தில் 70 வீதமான பெண்களும்  பட்டதாரிகாளக உள்ளாா்கள்.  அவா்களிடம் சிறந்த ஒழுக்கம்  உள்ளது. . இதற்கு உதாரணமாக  எமது நாட்டில் 51 வீதமான பெண்கள் உள்ளனா் அதில்  சிறைச்சாலைகளில் குற்றமிலைத்த  3 வீதமான பெண்களே உள்ளனர்   ஏனைய வீதத்தில்  ஆண்களே உள்ளனர். ஆகவே  தான் பெண்கள் சிறந்த ஓழுக்கமானவா்கள். பண்பு கொண்டவா்கள் . அவா்களுக்கு  சிறந்த தலைமைத்துவததுவம் வழங்கப்படல் வேண்டும்.  இதற்காக பெண்களும்   முன் வரல் வேண்டும். 

மலேசியாவில் பிரதம நீதியரசர் பெண் உள்ளாா், ஆசியாவில் 2040 ஆம் ஆண்டளவில் 5வது அபிவிருத்தியடைந்த நாடாக பங்களதேஸ் முன்னேறி வருகின்றது அங்கும்  பெண்தலைமைத்துவத்தின் கீழ் அந் நாடு கட்டியெழுப்பப்படுகின்றது. அவா்கள் 50 பில்லியன் டொலா்களை சேமித்து வைக்ககூடியதாக உள்ளது. எமது நாட்டில்  முன்னைய காலத்தில் முஸ்லிம் பெண்கள் கல்வி கற்கக் கூடாது ? ஆங்கில பாடசாலையில்  ஆண்கள் கல்வி கற்றால் வேறு மதத்தினை ஏற்றுவிடுவாா்கள் என எம்மவா்கள் சிலா்  பத்வா கொடுத்த வரலாறும் உண்டு இவற்றினை உடைத்து எறிந்து தான் அறிஞா் சித்திலெப்பை கொழும்பு சாகிராக் கல்லுாாியை  ஆரம்பித்தார்கள்.   கடந்த 30 வருட  கால யுத்தத்தினை முடிபுக் கொண்டுவந்த தலைமைத்துவத்தில் தற்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச சிறந்து விளங்கினாா் , சிறந்த இராணுவத் தளபதியாக  சரத் பொன்சேகா,  சிறந்த புலானாய்வுத் தளபதியாக  கேணல் முத்தலிப், சிறந்த உயா் இராணுவ வீரராக  கேணல் பாரிஸ் போன்றவா்கள் எமது  நாட்டின் வெற்றிக்காக  பங்கு கொண்டுள்ளாா்கள்.  எனது  நீதி அமைச்சின்  சில புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றோம். அதன் கீழ்   புதிதாக 46 இளம் நீதிபதிகள் அன்மையில் நியமிக்கப்பட்டுள்ளாா்கள்,  புதிதாக 100 நீதிமன்றங்கள் உருவாக்கப்பட உள்ளது.  84 சட்ட வழக்குகள் சட்டங்கள்  என புதிய உப பிரிவு  முறைகள் உருவாக்கப்்பட உள்ளது.  

இந்த அரசின் அமைச்சரவையில் முஸ்லிம் பிரநிதித்துவம் கட்டாயம் இருத்தல் வேண்டும். அதை கடந்த 2 வருட காலத்தில் என்னால்  உணரப்பட்டன.  அங்கு அமைச்சரவையில் முஸ்லிம் பிரநிதித்துவம் இல்லாமல் போனால் அங்கு எமது சமூகத்தில் பாரிய இழப்புகள் ஏற்படும். எனவும் அமைச்சா் அலி சப்றி அங்கு உரையாற்றினாா்.


3 கருத்துரைகள்:

மிக தெளிந்த சிந்தனை.

"அங்கு அமைச்சரவையில் முஸ்லிம் பிரநிதித்துவம் இல்லாமல் போனால் அங்கு எமது சமூகத்தில் பாரிய இழப்புகள் ஏற்படும். எனவும் அமைச்சா் அலி சப்றி அங்கு உரையாற்றினாா்."

Really? Haven't the Muslims already suffered severe injustices in just 2 years with you being the Minister of Justice? Let me remind you.

1. The ban on Burial of Covid 19 victims was imposed very suddenly
without any advance Notice. In fact, when the Ban on Burial came
into effect on 31st March 2020, a person was Forcefully Cremated on
30th March 2020, when there was NO Ban on Burial.

2. There were instances where the PCR/Antigen reports alleged to
confirm deaths due to Covid 19 NOT being showed to the Families of
victims and requests for further tests being denied. This was the
shocking and traumatic experience of the parents of a 20 day old
baby who was treated at the L.R.H. Colombo with the baby being
cremated. The astounding question is. when the mother of the baby
did NOT have Covid-19, how did the baby contact covid 19?

3. The WHO, the Premier Health Organisation in the world, has declared
that covid 19 victims can be buried and 190 countries in the world
permit Burial. But, why did Sri Lanka reject the WHO Guidelines and
refuse to follow the rest of the world?

So many International Organisations like the UNHCR, Amnesty
International, WHO and several countries appealed to Sri Lanka to
permit Burial. But, the Govt. turned a Deaf ear.

Finally, after almost one year, in February last, the Govt. permitted
Burial during the visit of Pakistani Premier Imran Khan. Even then, Burial can be carried out ONLY in one place in the country in Ottamawadi in the East. Why Not in other places?

There are so many other Injustices done to the Community like the Arrest and imprisonment of Lawyer Hejazz Hisbollah under the PTA and keeping him incommunicado for more than 1 1/2 years without bringing any Charges, Banning Muslim Organisations doing Religious and Social Services and also arresting key Officials under the PTA.

Mr. Justice Minister, Injustices carried out to the Muslims are far too many to relate and, what you must NEVER Forget is that these Injustices have been carried out under your watch as Justice Minister and you have been close to the President for several years. But, you could do NOTHING to Prevent these Injustices.

As a close Confidante of the President, you could do NOTHING to Prevent these Injustices. So, what is the use of there being any Cabinet Minister from the Muslim Community?Add Leader Ashraff in the first line...

Post a Comment