Header Ads



மக்களின் தவறான சிந்தனைகளால்தான், நாடு இவ்வளவு மோசமான நிலைமையை எதிர்நோக்கியுள்ளது


2022 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தில் பெரிய எதிர்ப்பார்ப்புகள் இல்லையெனத் தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியுமென தான் எதிர்ப்பார்க்கின்றேன் என்றார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் குருநாகல் தொகுதிக் கூடத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். “ இந்த வரவு- செலவுத்திட்டத்தில் பாரிய நிவாரணத்தை எதிர்பார்க்க முடியாது” என்றார்.

வரவு- செலவுத்திட்டத்தின் ஊடாக நிவாரணம் வழங்கப்படும் என்பது ஏமாற்று நடவடிக்கையாகும். அதனூடாக எந்தவொரு நிவாரணத்தையும் எதிர்பார்க்கமுடியாது என்றார்.

பட்ஜெட் என்பது நத்தார் தினத்தன்று வரும் நத்தார் தாத்தா வழங்கும் சீனிபோல மாதிரியானது என மக்கள் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். அது முற்றிலும் தவறானதாகும். மக்களின் அவ்வாறான தவறான சிந்தனைகளால்தான், நாடு இவ்வளவு மோசமான நிலைமையை எதிர்நோக்கியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   

No comments

Powered by Blogger.