Header Ads



டுபாய் செல்கிறார் ஜனாதிபதி - அந்நாட்டு அரச தலைவர்களையும் சந்திப்பார்


ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் அடுத்த மாதம் 4ஆம் திகதி நடைபெறவுள்ள இந்து சமுத்திர மாநாட்டில் தலைமை உரையாற்றுவதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்ததுடன், டிசெம்பர் மாதம் 5ஆம் திகதி, ஐக்கிய அரபு அமீரகத்தின் அரச தலைவரைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார் என்றார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.தொடர்ந்து தெரிவித்த அவர், இந்த சம்மேளனத்தின் தலைவராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செயற்படுவதுடன், உப தலைவர்களாக இந்தியா, சிங்கப்பூர், ஓமான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

குறித்த மாநாட்டின் இந்த வருடத்துக்கான தொனிப்பொருள்“ சுற்றாடல், பொருளாதாரம் மற்றும் தொற்று” என தெரிவித்த அவர், இந்த மாநாடானது இலங்கைக்கு மிகவும் முக்கியமானதாக அமையவுள்ளது என்றார்.இதேவேளை, கடந்த வாரம் ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிப் பொது செயலாளர் மற்றும் ஐ.நாவின் விசேட தூதுவரும் இலங்கைக்க வருகைத் தந்து, தமது அமைச்சுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்ததாக தெரிவித்தார்.

கொரோனா தொற்று மற்றும் உலகளாவிய பொருளாதார வீழ்ச்சி என்பவற்றின் பின்னணியில் இலங்கை முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்கள் மற்றும் நாம் அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பில், குறித்த இரண்டு அதிகாரிகளிடமும் விரிவான காரணங்களை முன்வைக்க இது ஒரு பயனுள்ள சந்தர்ப்பமாக அமைந்தது என்றார்.

4 comments:

  1. சுற்றாடலும் தொனிப்பொருளும் என்ன பாடுபட்டாலும் பரவாயில்லை,அரபு நாடுகளின் தலைவர்களிடம் பிச்சை கேட்பதற்கு இது நல்லதொரு ச்நதர்ப்பம்.பிச்சைப்படலத்தை ஆரம்பிக்க முன்பு சகல நாடுகளும் இலங்கையின் போக்கையும் இலங்கை உலகப் புகழ்பெற்ற கள்வர்களால் ஆட்சி செய்யப்படுகின்றது என்ற உண்மையையும் ்அந்த தலைவர்கள் மிக ஆழமாக விளங்கியிருக்கின்றார்கள். கேட்பது கிடைக்கும் என்ற விடயம் எப்படிப் போனாலும் இந்தநிலைமையில் பிச்சை கேட்கும் படலம் எவ்வளவு தூரம் சாத்தியமாகும என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  2. சுற்றாடலும் தொனிப்பொருளும் என்ன பாடுபட்டாலும் பரவாயில்லை,அரபு நாடுகளின் தலைவர்களிடம் பிச்சை கேட்பதற்கு இது நல்லதொரு ச்நதர்ப்பம்.பிச்சைப்படலத்தை ஆரம்பிக்க முன்பு சகல நாடுகளும் இலங்கையின் போக்கையும் இலங்கை உலகப் புகழ்பெற்ற கள்வர்களால் ஆட்சி செய்யப்படுகின்றது என்ற உண்மையையும் ்அந்த தலைவர்கள் மிக ஆழமாக விளங்கியிருக்கின்றார்கள். கேட்பது கிடைக்கும் என்ற விடயம் எப்படிப் போனாலும் இந்தநிலைமையில் பிச்சை கேட்கும் படலம் எவ்வளவு தூரம் சாத்தியமாகும என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  3. வேல்ட் ரெகோட் பிச்சை மாஸ்டர்

    ReplyDelete
  4. வாழ்க இதுவும் ஒன்று தான் இந்தியா போவது போல எல்லாம் இஸ்லாமிய விரோதிகள் தான்.

    ReplyDelete

Powered by Blogger.