Header Ads



ஒரு வீட்டுக்கு, அரைத் தேங்காய் போதும் - தென்னை ஆராய்ச்சி சபைத் தலைவர்


உள்நாட்டு தேங்காய் பாவனையில் 30 வீதமானவை வீணடிக்கப்படுவதாக தென்னை ஆராய்ச்சி சபையின் தலைவர் கலாநிதி சாரங்க அழகப்பெரும தெரிவித் துள்ளார்.

நாட்டின் வருடாந்த தேங்காய் அறுவடை 2800 மில்லியன் ஆகும். இதில் 70 சதவீதம் வீட்டு உபயோகத்துக்காகப் பயன்படுத்தப்படுகிறது என்றார். 

தேங்காய்பூவை கையால் பிழிந்தால் 20 முதல் 30 சதவீதம் தேங்காய்ப் பால் கிடைக்கும் எனினும்  ப்ளெண்டரில்  அல்லது மிக்ஸியில் அரைத்தால் 50 சதவீதம் தேங்காய்ப் பால் கிடைக்கும் என்றும் தேங்காய்களை சரியான முறையில் உட்கொண்டால், ஒரு வீட்டுக்கு அரைத் தேங்காய் போதும் என்றும் அவர் கூறினார். 

சௌபாக்ய கப்ருக வேலைத்திட்டத்தின் கீழ் 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் இலங்கையின் முதல் ஏற்றுமதிப் பயிராக தேங்காயை உருவாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தற்போது தேயிலை மூலம் ஆண்டுக்கு 1,260 மில்லியன் அமெரிக்க டொலரும், இறப்பரில் இருந்து 750 மில்லியன் அமெரிக்க டொலரும், தேங்காய் மூலம் 661 மில்லியன் அமெரிக்க டொலரும் அந்நியச் செலாவணியாக நாடு பெறுகிறது. 2023 ஆம் ஆண்டளவில் தேங்காய் மூலம் கிடைக்கும் அந்நியச் செலாவணி 1,300 அமெரிக்க டொலராக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

1 comment:

  1. தேங்காய் ஆராய்ச்சி நிலையத்தின் கின்னஸ் சாதனை படைத்துள்ள கண்டுபிடிப்பு.

    ReplyDelete

Powered by Blogger.