Header Ads



முகம்மது இப்றாஹீம் உவைஸ், பிரதம பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வு


(பி.எம்.எம்.ஏ. காதர்)

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்தில் பதில் பொலிஸ் பரிசோதகராகவும், நிருவாகப் பிரிவின் பொறுப்பதிகாரியாகவும் கடமையாற்றிவந்த மருதமுனையைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் முகம்மது இப்றாஹீம் உவைஸ் பிரதம பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வு பெற்றுள்ளார். 2020.02.08ஆம் திகதி முதல் செயற்படும் வண்ணம் இந்தப் பதவி உயர்வு இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் இன்று 2021.11.18ஆம் திகதி மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்தில் தனது கடமையைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இவர் 1966.07.15ஆம் திகதி மருதமுனையில் பிறந்தவர். ஓய்வுபெற்ற நெசவு ஆசிரியர் மர்ஹூம் முகம்மது இப்றாஹீம் செய்னம்பு தம்பதியின் புதல்வராவார். இவர் கல்முனை பாத்திமா கல்லூரி (தேசிய பாடசாலை), மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) ஆகியவற்றின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவர் 1988.01.18ஆம் திகதி பொலிஸ் உத்தியோகத்தராக பொலிஸ் சேவையில் இணைந்துகொண்டவர். திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, தங்கல்ல, மொனராகல, பதுளை, அம்பாரை, மட்டக்களப்பு ஆகிய பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றி 33 வருட பொலிஸ் சேவையை பூர்த்தி செய்துள்ளார்.

பொலிஸ் சேவையில் இணைந்த இவர் 1989.12.18ஆம் திகதி உப பொலிஸ் பரிசோதகராகவும் பதவி உயர்வு பெற்று 2010.02.08ஆம் திகதி பொலிஸ் பரிசோதகராகவும் பதவி உயர்வு பெற்று 2020.02.08ஆம் திகதி பிரதம பொலிஸ் பரிசோதகராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளார். 

பொலிஸ் சேவையில் இணைந்து கடமையாற்றும் இவர் மிகவும் நேர்மையாகவும், பொது மக்களுடன் அன்பாகவும் நெருக்கமாகவும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவரது மனைவி ரஜபுன்னிஸா ஆசிரியை ஆவார். இவருக்கு அப்றத் அகமட், சகருல் அன்சத், அஸ்ரத் அகமட், பாத்திமா அனா ஆகிய நான்கு பிள்ளைகள் உள்ளனர்.

 

1 comment:

Powered by Blogger.