Header Ads



"அமானிதத்தை காப்பாற்றுவோம்" நூறாண்டுக்கு பின்னர் பணத்தை துருக்கி அரசிடம், திருப்பி ஒப்படைத்த பாலஸ்தீன குடும்பம் (நெகிழச்செய்யும் உண்மைச் சம்பவம்)


முதலாம் உலகப் போரின் போது துருக்கி உதுமானிய சிப்பாய் ஒருவர் தங்களிடம் ஒப்படைத்த பணத்தை பாலஸ்தீனிய குடும்பம் ஒன்று நேற்று (04-11-2021)  துருக்கி அதிகாரிகளிடம் திருப்பி அளித்துள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய மேற்குக் கரையின், வடக்கே உள்ள நப்லஸ் நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில், 

அல் அலோல் குடும்பம் துருக்கியின் தூதர் ஜெனரல் அஹ்மத் ரிசா டெமிரரிடம் பணத்தை வழங்கியது.

பாலஸ்தீனத்தில் துருக்கி உதுமானிய  ஆட்சியின் இறுதி போரின் போது, ​​"நாங்கள் திரும்பி வந்தால் என்னுடைய பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன் அதுவரை பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருங்கள்" என்று சிப்பாய் ஒருவர் கூறிச்சென்றதாக,  பாலஸ்தீன குடும்பத்தினர் தெரிவித்தனர்.

"சிப்பாய் அதை என் மாமாவிடம் கொடுத்தார், இது நாள் வரை, பணம் எங்களிடம் இருந்தது. துருக்கிய சிப்பாய் போரில் இறந்தாரா அல்லது தாயகம் சென்று வயது மூப்பின் காரணமாக இறந்தாரா என்பது எங்களுக்குத் தெரியாது. எனது மாமா சிப்பாய் பெயரை மறந்துவிட்டதால், அவரது நிலை குறித்து எதுவும் எங்களுக்குத் தெரியாது, அந்த தொகை 152 உதுமானிய லிராஸ் பணம் என்று”என்று ரஹிப் ஹெல்மி அல் அலோல் கூறினார்.

துருக்கிய வரலாற்றாசிரியர்கள் 100 ஆண்டுகளுக்கு முன்பு அதன் மதிப்பு $30,000 என்று கூறுகிறார்கள்.பாலஸ்தீனிய மற்றும் துருக்கிய மக்கள் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள வேண்டியவை நிறைய உள்ளது, அதை நினைவு கூறும் விதமாக நீண்ட காலமாக மதிப்புமிக்க பொருட்களை வைத்திருந்ததற்காக பாலஸ்தீனிய குடும்பத்திற்கு தனது நன்றியை கான்சல் ஜெனரல் தெரிவித்தார்.

"நூறு ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் அரசியல் ரீதியாக உங்களை விட்டு பிரிந்தாலும், எங்கள் இதயங்கள் எப்போதும் உங்களை விட்டு பிரியாது " என்று ஜெனரல் டெமிரர் பாலஸ்தீனிய குடும்பத்தினரிடம் நன்றியுடன் தெரிவித்தார்.

@ ஜா.சி


No comments

Powered by Blogger.