Header Ads



கிண்ணியா விபத்தில் மரணமடைந்த 6 வயது நபாவின் ஜனாசா இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது


- ஹஸ்பர் ஏ ஹலீம் -

கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் உயிரிழந்த மரணங்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது. திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறிஞ்சாக்கேணி பகுதியை சேர்ந்த  ரபீஸ் பாத்திமா நபா வயது(  06) சிகிச்சை பலனின்றி  நேற்று (27) இரவு உயிரிழந்துள்ளார்.  

கடந்த 23.11.2021 அன்று காலை இடம் பெற்ற படகு விபத்தின் போது தி/கிண்ணியா அல் அஷ்கர் வித்தியாலயத்தில் தரம் 1 ல் கல்வி பயிலும் மாணவியே இவ்வாறு உயிரிழந்த சோக சம்பவத்தை மேலும் ஏற்படுத்தியுள்ளது.தனது தாயுடன் பாடசாலைக்கு செல்வதற்காக படகில் பயணித்த வேலையில் தாய் உயிர் தப்பிய நிலையில் கிண்ணியா தளவைத்தியசாலையில் இருந்து  சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தாயிடம் வினவிய போது "எனது பிள்ளை சம்பவம் நடந்து ஆறு நாட்களாக கண்களை திறக்கவில்லை திருகோணமலை வைத்தியசாலையில் இருந்து இரவு மரணித்ததாக சொன்னார்கள்" என குறித்த பிள்ளையின் தாயான என்.பர்வீன் ஆழ்ந்த சோகத்துடன் கண்ணீர் விட்டழுதார்.இரு பெண் பிள்ளைகளில் சிரேஷ்ட பெண் பிள்ளையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

-- உயிரிழந்த சிறுமியின் ஜனாசா கிண்ணியா நடுத்தீவு பொது மையவாடியில் இன்று(28) மாலை  நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்னார் ரபீஸ்,நூர்தீன் பர்வீன் ஆகிய  தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியுமாவார்.  மொத்தமாக படகு விபத்தில் ஐந்து மாணவர்கள் உட்பட ஏழு பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.