Header Ads



அரசாங்கத்தின் தேவைகளின் பேரில் உண்மையைப் பொய்யாக்கக்கூடாது என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம் - SJB


அரசாங்கத்தின் சேதனச் செய்கை திட்டம் குறித்த உண்மைத் தகவல்களை வெளியிட்டமையினால் விவசாயக் கொள்கைப் பேரவையின் தலைவர் பேராசிரியர் புத்தி மாரம்பேவை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மூத்த விவசாயத்துறை பேராசிரியராவார்.இன்று இந்த விடயப்பரப்பில் முதன்மையான முன்னோடி அறிஞர்களில் ஒருவராகப் புகழ் பெற்றவர்.

புத்திஜீவிகளைக் கொண்டு ஆட்சி நடத்துவோம் எனக் கூறி அதிகாரத்திற்கு வந்த பொதுஜன பெரமுன அரசாங்கம்,இன்று புத்திஜீவிகள் வெளியேற்றப்படுவது ஒரு வருந்தத்தக்க விடயமாகும்.இன்று அரசாங்கத்தின் கருத்துக்களுடன் உடன்படாத புத்திஜீவிகள் இராஜினாமா செய்ய அல்லது பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 

பேராசிரியர் புத்தி மாரம்பே சேதன உரங்களைப் பற்றி அறிவியல் பூர்வமாக விளக்கங்களை முன்வைத்ததோடு,இந்த தீர்மானத்தால் நாட்டில் உணவுப் பாதுகாப்பிற்கு ஏற்படும் சவால்கள் தொடர்பாக விளக்கங்களை முன்வைத்தது அறிவியல் தரவுகளின் அடிப்படையிலயேயாகும்.

அரசாங்கத்திற்கு கட்டுக்கதைகளே தவிர விடய அறிவியல் என்பது ஆதாரம் அல்ல என்று கோவிட் கட்டுப்படுத்தலின் போது சுட்டிக்காட்டினார்கள்.இது சார்ந்து செயற்பட்ட பல நிபுணர் குழுக்களின் இராஜினாமாக்கள் மூலமும் நிரூபிக்கப்படுவது,அரசியலில் தனது கருத்துக்களுடன் உடன்படுபவர்களை மட்டுமே அரசாங்கம் அறிஞர்களாகக் கருதுகிறது என்பதையாகும்.

பேராசிரியர் புத்தி மாரம்பேவை நீக்கும் முடிவை ஐக்கிய மக்கள் சக்தியாகிய நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

புத்திஜீவிகளின் பணி நாட்டுக்கும் மக்களுக்குமான பணியாக இருக்க வேண்டும் என்பதோடு தங்கள் அறிவையும் தெளிவையும் நாட்டுக்கும் மக்களுக்கும் பயன்படுத்துவதைத் தவிர அரசாங்கத்தின் தேவைகளின் பேரில் உண்மையைப் பொய்யாக்கக்கூடாது என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

ரன்சித் மத்தும பண்டார 

பொதுச் செயலாளர் 

ஐக்கிய மக்கள் சக்தி

No comments

Powered by Blogger.