Header Ads



சிந்தக மாயாதுன்ன Mp யின் ஏற்பாட்டில், புத்தளத்தில் ஜனாஸாக்களை அடக்குவதில் உள்ள பிரச்சினைக்குத் தீர்வு


- கரீம் ஏ. மிஸ்காத் -

பல வாரங்களாக புத்தளம் நகரப் பகுதிகளில் வீடுகளில் இடம் பெறும் மரணங்களுக்கு திடீர் மரண விசாரணை நடைமுறையின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பொதுவாக வீட்டில் மரணிப்போரை ஒரு வைத்தியர் மரணத்திற்கான காரணத்தை உறுதிப்படுத்தி வழங்கும் சான்றிதழைப் பெற்று,

 கிராம சேவையாளர் மரணத்தைப்பற்றி அறிக்கைப் படுத்தும் படிவம்( B 24) ஒன்றினை வழங்குவார்.

அதன் பின்பு வழமை போன்று உடலை அடக்கம் செய்யும் வேலையில் குடும்பத்தார் ஈடுபடலாம்.

தற்போதைய சூழ்நிலையில் சுகாதார வழிகாட்டல் சுற்று நிருபத்தின்படி மரணம் நிகழ்கின்ற குறிப்பிட்ட வீட்டிலே கொரோனா தொற்று, தனிமைப்படுத்தல், அல்லது சுற்றுச்சூழலில் அவ்வாறான கொரோனா தொற்று அறிகுறிகள் காணப்படாத விடத்து,

  மரணத்திற்கான காரணத்தை உறுதிப்படுத்தி வைத்திய அதிகாரியால் வழங்கப்படும் அறிக்கையைப் பெற்றபின்  கிராம உத்தியோகத்தர்

 மரணத்தைப்பற்றி அறிக்கைப் படுத்தும் படிவத்தை ( B 24) வழங்கலாம்.

எனினும் சென்ற மாதம் புத்தளம் வேப்பமடு பகுதியில் இடம்பெற்ற ஒரே குடும்பத்தில் ஏற்பட்ட சடுதியான தொடர் மரணம் காரணமாக இந்த நடைமுறையில் சிக்கல் உண்டானது.

அதன் பிற்பாடு புத்தளம் நகரப் பகுதிகளில் வீடுகளில் இடம் பெறும் மரணங்களுக்கு திடீர் மரண விசாரணை நடைமுறையின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கான ஒரு சிக்கல் நிலை தோன்றியது.


 இந்த நடைமுறை புத்தளம் நகர பகுதியில் வாழும் முஸ்லிம் சமூகத்தில் ஒரு பாரிய பிரச்சினையாக் காணப்பட்டது.

முஸ்லிம் சமூக ஆர்வலர்களால் புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சிந்தக்க மாயாதுன்ன அவர்களிடம் இப்பிரச்சினை  தொடர்பாக முன்வைக்கப்பட்டது.

இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக 

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிந்தக்க மாயாதுன்ன 

 அவர்களின் வேண்டுகோளின் பேரில் நேற்று புத்தளம் மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது. 

இக்கலந்துரையாடலில்

புத்தளம் மாவட்ட செயலாளர், புத்தளம் பிரதேச செயலாளர், கிராம உத்தியோகத்தர்கள், மற்றும் சுகாதார உத்தியோகத்தர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.

அக் கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி

புத்தளம் நகர பகுதியில் வீடுகளில் இடம்பெறும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை வைத்தியரின் அறிக்கை கிடைக்கப் பெறும்பொழுது கிராம உத்தியோகத்தர் அதற்கான மரண அறிக்கையை (B 24) வழங்கி வழமையான நடைமுறையின் கீழ்

ஜனாசாவை அடக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதியினை புத்தளம் மாவட்ட செயலாளர் வழங்கியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிந்தக மாயாதுன்ன தெரித்துள்ளார்.

No comments

Powered by Blogger.