Header Ads



மாபியாவின் பிடியில் சுகாதார அமைச்சு - ஜனாதிபதிக்கும், வியதமகவிற்கும் விசுவாசிகளுக்கு முக்கிய பதவிகள் - Dr ருக்சான்பெலான


சுகாதார அமைச்சினை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ள மூவர்மாபியா போன்று செயற்படுகின்றனர் என அரச மருத்துவ அதிகாரிகள் மன்றத்தின் தலைவர் வைத்தியர் ருக்சான்பெலான குற்றம்சாட்டியுள்ளார்.

குறிப்பிட்ட மூவரும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தையும் பிரதிசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளனர் என  ருக்சான் பெலான குற்றம்சாட்டியுள்ளார்.

அரசமருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன மோசடியில் ஈடுபட்டுள்ளாh அடுத்த ஐந்து வருடங்களில் அவரது பெயர் பனாமா பேப்பரில் இடம்பெறும் என  ருக்சான் பெலான  தெரிவித்துள்ளார்.

தனது பதவியை பிரசன்ன குணசேன இராஜினாமா செய்யவுள்ளார் என பத்திரிகையில் செய்தியொன்று வெளியாகியுள்ளது அரசமருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவராக பதவி வகுப்பதற்கான தகுதியற்றவர் பிரசன்ன குணசேன என மருத்துவர் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகளின் வேண்டுகோளின் அடிப்படையில் அல்லது வியாத்மகாவின் சிபாரிசின் அடிப்படையில் இந்த பதவிகள்வழங்கப்படுகின்றன இவர்கள் எவரும் இந்த பதவிகளை வகிப்பதற்கு தகுதியற்றவர்கள் அவர்கள் அரசசேவையில் பணியாற்றுவதற்கு தகுதியற்றவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனியார் துறையில் பணியாற்றியவர்கள் தற்போது அரசாங்கசேவைக்குள் கொண்டுவரப்படுகின்றனர்,இவர்கள் மாபியாவை உருவாக்கி  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில் சுகாதாரதுறைஎவ்வாறு முன்னோக்கி செல் முடியும், சுகாதார சேவை இவ்வாறு செயற்படமுடியாது மருந்துகளால் மக்களிற்கு நிவாரணம் கிடைக்கவில்லைஎனவம் அவர் தெரிவித்துள்ளார்

மருந்துகளிற்கு தட்டுப்பாடு உள்ளது இந்தியாவிலிருந்து  இறக்குமதி செய்யப்படும் புற்றுநோய் மருந்துகள் தரம்குறைந்தவை என தெரிவிக்கப்பட்;டுள்ள போதிலும் அவை இறக்குமதி செய்யப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டின் கட்டுப்பாடு மாபியாக்களின் கரங்களில் உள்ளதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரசன்ன குணசேன என்று ஒரு தலைவர் இருக்கின்றார்,அவர் அனைவரையும் மிரட்டுகின்றார்,அவர் ஜனாதிபதிக்கும்  வியதமகவிற்கும் விசுவாசி என்ற அடிப்படையிலேயே அவருக்கு தலைமை பதவி வழங்கப்பட்டுள்ளது,நாங்;கள் 25 வருடங்களாக தலைவர்களை பார்த்திருக்கின்றோம் இப்படி ஒருவரை பார்க்கவில்லை அவர் தனியார் மருத்துவமனையில் பணியாற்றுவதுடன் அரசமருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவராகவும் உள்ளார் என ருக்சான் பெலான தெரிவித்துள்ளார். Tkural

No comments

Powered by Blogger.