Header Ads



ஜனாதிபதியை பாராட்டுகிறார் ரணில்


தனக்கு அரசியல் அனுபவம் குறைவு என்பதால், பிரதமரும், அமைச்சரவையும் இணைந்து கூட்டாக செயற்படுவோம் என ஜனாதிபதி கூறியுள்ளதன் மூலம் 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தோல்வியடைந்துள்ளது என்பதை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக முன்னாள் பிரதமரும்,ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான (Ranil Wickramasinghe) தெரிவித்துள்ளார்.

தற்போது 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்து விட்டு 19வது திருத்தச் சட்டத்தின் கீழ் அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டியதையே செய்ய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதற்காக அரசாங்கம், எதிர்க்கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினையை தீர்ப்பதற்கான இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும் எனவும் முன்னாள் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தோல்வியடைந்துள்ளது என்று கூறியமை சம்பந்தமாக ஜனாதிபதிக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.