Header Ads



தொடரும் விவசாயிகளின் போராட்டம்


நம் நாட்டின் அரசியலமைப்புச் சட்டங்களை உருவாக்கும் போது ஜனாதிபதியின் அதிகாரங்களை எவ்வளவு கூட்டிக் குறைக்கலாம் என்றும் பிரதமரின் அதிகாரங்களை எவ்வளவு கூட்டிக் குறைக்கலாம் என்றுமே அவதனாங்களை செலுத்துகிறோமே தவிர, விவசாய சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க அரசியலமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமைகள் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை கொண்டு வர ஒருபோதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தான் கொண்டு வரும் அரசியலமைப்பு சீர்திருத்தங்களில் விவசாயியை பாதுகாக்கும் அடிப்படை உரிமைகளும் உள்ளடக்கப்படும் எனவும், ஆட்சியாளர்கள் நாட்டின் விவசாயிகளுடன் தனது இஷ்டத்துக்கு ஏற்ப விளையாட அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.அச்சமயம் இப்போது இருப்பது போல் தரமற்ற உரம் நாட்டுக்கு கொண்டுவரப்படாது என்றும், நானோ நைட்ரஜன் மோசடிகள் நடக்காது என்றும், ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் விவசாயிக்கு அநீதி இழைக்கப்பட்டால் உச்சநீதிமன்றம் சென்று தனக்கு நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் உடுதும்பர தேர்தல் தொகுதியின் பிரதான அமைப்பாளர் சட்டத்தரணி சனத் பண்டார ஏகநாயக்கவினால் “மாற்றம் நல்லது விவசாயி அனாதரவில்”என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (28)காலை கலந்துகொண்டார்.ஹசலக்க பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்‌ஷமன் கிரியெல்ல,முன்னாள் அமைச்சர் லக்‌ஷமன் செனவிரத்ன,பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதேசத்தைச் சேர்ந்த பெருந்தொகையான விவசாயிகள் என பலரும் கலந்துகொண்டனர்.



No comments

Powered by Blogger.