Header Ads



வகுப்பில் குழப்படி அல்லது கெட்டிக்காரரிடம் மொனிட்டர் பொறுப்பை ஒப்படைப்பது போன்று ஞானசாரரை தலைவராக ஜனாதிபதி நியமித்திருக்கிறார்


வகுப்பில் குழப்படி செய்வோரிடமும் கெட்டிக்காரர்களிடமுமே அந்த வகுப்பின் பொறுப்பை ஒரு பாடசாலையின் அதிபரோ அல்லது ஆசிரியரோ, ஒப்படைப்பார்கள். அதேபோன்றுதான், ஞானசாரதேரரை புதிய செயலணிக்கு ஜனாதிபதி நியமித்திருக்கிறார் என காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

ஜனாதிபதி பௌத்த மதத்துக்கு உரியவர் என்றும், அதனால் ஏனைய மதங்களுக்கு அச்சுறுத்தலாகவும் இடையூறாகவும் இருப்பார் என்றும் சிறுபான்மையினர் மத்தியில் இருந்து வந்த தப்பான சிந்தனை தற்போது விலகி வர ஆரம்பித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், “வீட்டுக்கு உறுதி” என்ற தொனிப்பொருளில், கிண்ணியா பிரதேசத்தில், 89 பேருக்கு காணி உறுதிப்பத்திரம், கிண்ணியா பிரதேச செயலகத்தில் நேற்று (28) வழங்கிவைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, காணி அமைச்சர்

மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், “வீட்டுக்கு வீடு உறுதி வழங்கும் தேசிய திட்டத்தின் கீழ், திருகோணமலை மாவட்டத்தில் முதலாவதாக கிண்ணியா

பிரதேசத்தில் வழங்கப்படுவதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன்.

“இந்நாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஒரே நாட்டவர் என்ற அடிப்படையில்,

தனது தூரநோக்கு சிந்தனையை ஜனாதிபதி ஆரம்பித்திருக்கிறார். “அரச காணிகளில் குடியிருக்கும் அனைவருக்கும் காணி உறுதிப்பத்திரம் வழங்கப்பட வேண்டுமென ஜனாதிபதி என்னிடம் பணிப்புரை விடுத்திருக்கின்றார். அதற்காக சகல நடவடிக்கையையும் நான் எடுத்து வருகின்றேன்.

“இத்திட்டத்தின் கீழ், ஒரு இலட்சம் காணி உறுதிகள் வழங்கப்பட வேண்டும்.

எனினும், கொனோரா தாக்கம் காரணமாக அவற்றை முழுமையாக பூர்த்தி செய்ய

முடியாது போனாலும், ஆகக்குறைந்தது 60 உறுதிப்பத்திரம் வழங்குவதற்கான

நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்” என்றார்.

ஒலுமுதீன் கியாஸ், எஸ்.எல்.நௌபர்


No comments

Powered by Blogger.