Header Ads



புத்தளம் கொழும்பு பேஸ் முகத்திடலில் ஆர்ப்பாட்டம்


- கரீம் ஏ. மிஸ்காத் -

இன்று 24ஆம் திகதி (ஒக்டோபர்) காலை 10:30 மணியளவில் புத்தளம் கொழும்பு பேஸ் முகத்திடலில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

உரத்தை வழங்கு.!

பொருட்களின் விலையைக் குறை.!

எரிபொருளின் விலையை உயர்த்தாதே.!

விவசாயிகளுக்கு பசளை வேண்டும்.!

கல்பிட்டி, நுரைச்சோலை விவசாயிகளுக்கு உரத்தைத்தா.!

 உண்பதற்குத் தா!

எனும் கோசத்துடன் இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் 

ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்டது.

இன்று காலை 10:30 மணியளவில் மன்னார் வீதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட

மாட்டு வண்டியின்  நடை பவணி 

கொழும்பு வீதியில் அமைந்துள்ள புத்தளம் கொழும்பு பேஸ் முகத்திடலை 11:00 மணியளவில் வந்தடைந்தது.  ஆர்ப்பாட்டத்தில்

கலந்து கொண்டோர் பல்வேறு கோஷங்களையும் எழுப்பினர்.

அத்தோடு மாட்டுவண்டியில் வர்த்தக அமைச்சர், விவசாய அமைச்சர், பிரதம மந்திரி போன்ற ஆட்சியாளர்களின் உருவ பொம்மைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

 இதில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு பொருட்களையும் சுலோகங்களையும் தாங்கி நின்றனர்.

சுளகு, எரிவாயு சிலிண்டர், பசளை இல்லாததால் வறண்ட நிலையில் காணப்பட்ட மரக்கறி வகைகள், என பல பொருட்களையும் கொண்டு வந்து ஆர்ப்பாட்டப் பேரணியில் காட்சிப்படுத்தி நின்றனர்.

வர்த்தக அமைச்சர், விவசாய அமைச்சர், பிரதம மந்திரி போன்றோரின் உருவ பொம்மைகளும் எரிக்கப்பட்டன.

ஐககிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி,

முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ. எம். டொக்டர் இல்லியாஸ்,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னால் வடமேல் மாகாண சபை உறப்பினர் எம். நியாஸ்,  புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் றிபாஸ் நஸீர்,

புத்தளம் நகரசபை உறுப்பினர் எம். தில்சான், புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் எஸ். ரவி

ஆகியோரும் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.