Header Ads



இலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது - அம்னெஸ்டியின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு


இலங்கையில் உள்ள முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை அரசாங்கம் இ உறுதி செய்துள்ளது.  அனைத்து இலங்கையர்களும் ஒழுக்கமான வாழ்க்கையினை வாழ்வதை உறுதி செய்ய அரசாங்கத்துக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரண (Ramesh Pathirana) தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து சில சம்பவங்கள் பதிவாகிய நிலையில், நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகள், எந்த குறிப்பிட்ட சமூகத்தையும் குறிவைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் முஸ்லிம்கள் குறி வைக்கப்படுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை சுமத்திய குற்றச்சாட்டுக்கே இலங்கை அரசாங்கம் இந்த பதிலை வழங்கியுள்ளது.

1 comment:

  1. Whom are you trying to Fool Mr. Cabinet Spokesman? You think that International Organisations and Foreign Governments Don't Know what is going on in Sri Lanka?

    Don't Forget the more you Deny the Truth, the more you make yourself Culpable and open the country for International Action inimical to the country's interests. So, Stop Blabbering, if you really love the country.

    ReplyDelete

Powered by Blogger.