Header Ads



மகிழ்ச்சியாக இருப்பதை விட, விசுவாசமாக இருப்பதே முக்கியம் - விராட் கோலி


"பேட்டிங்கிலும் பீல்டிங்கிலும் ஒரு விளையாட்டு வீரராக பெங்களூரு அணிக்கு 120 சதவிகித பங்களிப்பைச் செய்திருக்கிறேன். வேறு எந்த அணிக்காகவும் ஒருபோதும் ஆட மாட்டேன். மகிழ்ச்சியாக இருப்பதை விட விசுவாசமாக இருப்பதே முக்கியம். ஐபிஎல் போட்டிகளில் ஆடும் கடைசி நாள்வரை பெங்களூரு அணியுடனேயே இருப்பேன்" என்றார் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி.

கொல்கத்தா அணியுடனான பிளே ஆப் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி வெளியேறிய பிறகு கவலை தோய்ந்த முகத்துடன் அவர் பேசினார்.

பெங்களூரு அணியின் கேப்டனாக அவர் ஆடி முடித்திருக்கும் கடைசி சீசன் இது.

சீசனின் தொடக்கத்தில் தொடர் வெற்றிகளைப் பெற்று வந்த பெங்களூரு அணி முக்கியமான போட்டியில் தோற்றுப் போனது ரசிகர்களை பெருங்கவலையடைச் செய்திருக்கிறது. பெங்களூரு அணியின் ரசிகர்கள், விராட் கோலியின் ரசிகர்களையும் தாண்டி பலரும் சமூக வலைத்தளங்களில் சோகத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்வாகமும் கோலிக்கு விடையளிக்கும் வகையிலான பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது. "முன் மாதிரியாகவும், உத்வேகம் அளிப்பவராாக இருக்கிறீர்கள்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.