Header Ads



வெற்றிலை விற்று, தந்தை வாங்கிக் கொடுத்த கைத்தொலைபேசி, கேம்ஸ் விளையாடி மகன் தற்கொலை - பண்டாரகமயில் அதிர்ச்சி


பண்டாரகம, றைகம பகுதியில் ஒன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி இருந்த 16 வயது சிறுவன் ஒருவன் கடந்த 11 ஆம் திகதி தனது வீட்டின் சமையலறையில் அமைந்துள்ள கொங்கிரீட் தூணில் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளான்.

பண்டாரகம, றைகம பகுதியில் வசிக்கும் இசுரு அஷேன் என்பவரே உயிரிழந்துள்ளார். வெற்றிலை விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தில் பகுதி பகுதியாகச் செலுத்தி அஷேனின் எதிர்காலம் வெற்றியடையும் என்ற நம்பிக்கையில் அவனது கல்விக்காக ஸ்மார்ட் தொலைபேசி வாங்கிக் கொடுத்ததாகவும் அந்தச் சிறுவனின் தந்தையான மோலி விக்கிரமராச்சி தெரிவித்துள்ளார்.

குடும்பத்தில் ஒரே பிள்ளையான அஷேன் கல்வி மற்றும் நடனம் போன்றவற்றில் சமமான திறமையானவர் என்று கூறப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பாகச் சிறுவனின் தந்தை விபரிக்கையில்,

பிற்பகல் 2.45 மணியளவில் கீழ்க் கடையிலிருந்து  வெற்றிலைக் கூறு ஒன்று கூட இல்லை என்றும் உடனடியாகக் கொண்டு வருமாறும்  எனக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. இதை எனது மகனிடம் நான் கூறினேன்.

நான் வெற்றிலைக் கூறுகளைக் கொஞ்சம் கொஞ்சமாக பையில் வைத்துக் கொண்டு முன்னால் சென்றேன். எனக்குப் பின்னால் மகன் வந்தார். நான் முச்சக்கர வண்டியில் ஏறி கடைக்குச் சென்று விட்டேன் என அவர் தெரிவித்தார்.

ஒரு மணித்தியாலம் கழித்து நான் வீட்டுக்குத் திரும்பி மகனே என்று அழைத்தேன். ஆனால் அவன் வரவில்லை. மகன் என்று நான் அழைத்தால் எங்கிருந்தாலும் “ஏன் அப்பா?” என்று வழக்கமாகக் கேட்பார் என்றும் நான் அறையில் பார்த்தேன் அங்கும் மகன் இருக்கவில்லை என்றும் அவர் உணவு உண்கிறார் என நினைத்துச் சமையல் அறைக்குச் சென்று பார்த்தேன் என் மகன் கொங்கிரீட்டில் தூக்கிட்டுத் தொங்குவதைப் பார்த்தவுடன் நான் ஓடிச் சென்று என் மகனை மேலே தூக்கி எடுத்தேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் என் மகனின் கழுத்திலிருந்த முடிச்சை அவிழ்க்க முயற்சித்தேன். ஆனால் என்னால் முடியவில்லை. நான் சுமார் 5 நிமிடங் களில் ஹொர ணை வைத்தியசாலைக்குச் சென்றேன், ஆனால் என் மகன் உயிரை இழந்து விட்டார் ஐயோ!

சிறுவனின் திடீர் மரணம் குறித்து பாணந்துறை பிரதேச குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகள் பரிசோதனை நடத்திய போது குறித்த சிறுவனின் அறையில் பல்வேறு இடங்களில்  கைத்தொலை பேசியில் கேம்ஸ் விளையாட பயன்படுத்தவென மறைத்து வைக்கப்பட்டிருந்த வெவ்வேறு விலைகளிலான  50க்கு மேற்பட்ட டேட்டா அட்டை களையும்,  குறித்த தொலைபேசியில்  மூவரின் கைரேகைகளையும் கண்டு பிடிக்க முடிந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுவனின் கையடக்கத் தொலைபேசியை பரிசோதனை செய்து பார்த்த போது 500க்கு மேற்பட்ட புகைப்படங்களில் (பல்வேறு விளையாட்டுகள்) சுமார் 99 வீதமானவை  விளையாட்டு புகைப்படங்களும் அதனுடன் தொடர்புடைய சொற்றொடர்களும் இருந்தன என்றும் சிறுவன் விளையாட்டுக்கு அடிமையாக இருந் துள்ளான் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனது மகன் ஒன்லைன் மூலம் கல்வி கற்பதற்காக நான் கைத்தொலைபேசி வாங்கிக் கொடுத்தேன் என்றும் இறுதியில் ஒன்லையினும் இல்லாமல் போய் விட்டது என்றும் சிறுவன் அதன் பின்னர் விளையாடுவதற்குப் பழகி விட்டான் என்றும் ஐயோ பெற்றோர்களிடம்  கெஞ்சிக் கேட்கிறேன் பிள்ளைகளுக்குத் தொலைபேசி கொடுக்க வேண்டாம் என்றும் ஒரே ஒரு பிள்ளையின் இழப்பை தாங்க முடியாதுள்ளதென்றும் அஷே னின் தந்தை அழுதவாறு தெரிவித்துள்ளார். TL

No comments

Powered by Blogger.