Header Ads



ஞானசாரரின் நியமனமானது, சட்டத்தின் ஆட்சியை அவமதிப்பதாகும்


கலகொடஅத்தே ஞானசார தேரர் தலைமையில் 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஞானசார தேரரின் செயலணியானது “ஒரே நாடு, ஒரே சட்டம்” என்ற எண்ணக்கருவை நடைமுறைப்படுத்துவதுடன், அந்தக் கருத்தை ஆராய்ந்து சட்டமூலமொன்றை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

வெறுப்பை,இனவாதத்தை, தீவிரவாதத்தை விதைத்து, சட்டத்தை கையில் எடுத்து, சட்டத்தின் முன் குற்றவாளியாக மாறிய ஒருவருக்கு சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரத்தை வழங்குவது கேலிக்கூத்தானது.  இவ்வாறான செயலணிகளை நியமித்த இலங்கை ஜனாதிபதி, சட்டத்தின் ஆட்சியை அவமதிப்பதாகத் தோன்றுவதுடன்,ஜனநாயகக் கோட்பாடுகள் பற்றிய அறிவின்மைக்கான அவரது நடவடிக்கைகள் ஆபத்தான முன்னுதாரணமாகும்.

மேலும்,இந்த நியமனம் நாட்டை ஆள முடியாத ஒரு பலவீனமான,திறமையற்ற தலைவரிடம் இருந்து நமது கவனத்தை திசை திருப்பும் மற்றொரு பயனற்ற முயற்சியாகும்.

அரசாங்ககளின் பருவகால ஆணைக்குழுக்கல் மற்றும் இத்தகைய செயலணிகளில் நம்பிக்கையீனங்கள் தொடர்ச்சியாக ஏற்படுவது ஒர் ஜனநாயக நாட்டிற்கு ஏற்புடையதல்ல என்பதோடு தேசிய இலக்குகளை அடைந்து கொள்வதற்குமான பயனுறுதி வாய்ந்த கொள்கையாக இது அமையாது என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம். 

இலங்கையின் பிரிக்கமுடியாத பன்முகத்தன்மையின் பிரகாரம் சகல இனங்களையும் பிரிதிநிதித்துவப்படுத்தும் ஆளணியாக இத்தகைய நியமனங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பதோடு இது குறிப்பிட்ட சமூகங்களை தேசிய நீரோட்டத்திலிருந்து தூரமாக்குவதான போக்கால் நிலைபோறான அடைவுகளை ஒரு போதும் சாத்தியப்படுத்தாது என்பதை மீள வலியுறுத்துகிறோம்.

சர்வதேச மனித உரிமை கோட்பாடுகள்,நியமங்கள், பிரகடனங்களுக்கு ஏற்புடையதாக சம வாய்ப்புகளுக்கான பங்கேற்புகளை விட்டும் இனத்துவ பாத்திரங்களை உள்ளீர்காமை ஜனநாயகத்திற்கான பரந்த சவாலாக பார்க்கிறோம்.ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் தேச நலனை சக்திப்படுத்துவதாகவே   அமைய வேண்டும்.


ஏ.ஜி.நளீர் அஹமட்,

தலைவர்,

அநுராதபுர மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம்.

No comments

Powered by Blogger.