Header Ads



வட்சப்புக்கு பேரதிர்ச்சி - ஒரேநாளில் டெலிகிராமுக்கு தாவிய பல மில்லியன் யூசர்கள்


வாட்ஸ்அப் செயலியின் முடக்கத்தால் கடந்த திங்கட்கிழமை முதல் 70 மில்லியன் யூசர்கள் டெலிகிராம் செயலிக்கு மாறி இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் திங்கட்கிழமை இரவு திடீரென முடங்கின. உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் இந்த ஆப்ஸ்கள் திடீரென முடங்கியதால், என்னசெய்வதென தெரியாமல் யூசர்கள் திகைத்தனர். இணையப் பிரச்சனை என முதலில் நினைத்த யூசர்கள், சில மணி நேரங்களுக்குப் பின்னரே வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் முடங்கியதை அறிந்து கொண்டனர்.

யூசர்கள் எதிர்கொண்ட இந்த திடீர் பிரச்சனைக்கு விளக்கம் அளித்த பேஸ்புக் நிறுவனம், தொழில்நுட்ப பிரச்சனையால் செயலிகள் முடங்கியிருப்பதாக தெரிவித்தது. சுமார் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் ஆப்ஸ்களின் செயல்பாடு இயல்பு நிலைக்கு திரும்பியது. இதனால், ஒரே இரவில் மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு சுமார் 51 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்புகளை சந்தித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், தங்கள் மீது மக்கள் உலகம் முழுவதும் வைத்திருக்கும் நம்பிக்கை தெரிந்து கொண்டதாகவும், அதற்கேற்ப தங்கள் நிறுவனத்தின் செயல்பாடு இருக்கும் என கூறியிருந்தார்.

இந்நிலையில், வாட்ஸ்அப் செயலியின் சில மணிநேர முடக்கம், டெலிகிராம் செயலியின் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளது. வாட்ஸ்அப் முடக்கத்தை அனுபவித்த யூசர்கள், கடந்த 24 மணி நேரத்தில் டெலிகிராம் செயலியின் யூசர்களாக மாறியுள்ளனர். இதுவரை 70 மில்லியன் புது யூசர்கள் கிடைத்திருப்பதாக டெலிகிராம் நிறுவனம் தெரிவித்துள்ளது. டெலிகிராம் ஆப் நிறுவனர் பாவெல் துரோவ் பேசும்போது, கடந்த 24 மணி நேரத்தில் டெலிகிராம் செயலியின் வளர்ச்சி விகிதம் எதிர்பார்க்காத வகையில் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

ஒரே நாளில் மற்ற தளங்களை அணுகுவதைக் காட்டிலும் சுமார் 70 மில்லியன் புது யூசர்கள் டெலிகிராமுக்கு கிடைத்துள்ளனர். அவர்களின் வருகையை தாங்கள் முழுமனதோடு வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார். எந்தவித குறைபாடுகளும் இல்லாமல் தொடர்ந்து பயணிப்பதால், டெலிகிராமுக்கு கிடைத்த மிகப்பெரிய சன்மானமாக நினைப்பதாக தெரிவித்த பாவெல் துரோவ், இதே வகையில் தங்களின் பயணம் தொடர்ந்து இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதேநேரத்தில் டெலிகிராம் செயலியின் வேகம் குறைந்திருப்பதை நாங்கள் அறிவோம் என கூறிய அவர், அதற்கு முக்கிய காரணம் உலகம் முழுவதும் உள்ள யூசர்கள் அதிகளவில் செயலியை பயன்படுத்தியதால் இந்த வேகக்குறைவு என விளக்கம் கொடுத்துள்ளார்.

தொடர்ந்து பேசிய பாவெல் துரோவ், "டெலிகிராம் செயலிக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது. புதிய யூசர்களை வரவேற்கிறோம். இன்னும் இந்த செயலியைப் பற்றி அறியாதவர்களுக்கு, அதனை அவர்களிடம் கொண்டு செல்ல அனைத்து முயற்சிகளையும் எடுப்போம். தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 161 மில்லியன் யூசர்கள் டெலிகிராம் ஆப்பை பயன்படுத்துகின்றனர்" எனக் குறிப்பிட்டார்.

பேஸ்புக் மற்றும் அதன் மற்ற ஆப்ஸ்கள் குறித்து டெக் வல்லுநர்கள் பேசும்போது, உலகளாவிய சந்தையில் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் செயலிகளுக்கு மாற்றான மற்ற செயலிகளுக்கான தேவை இருப்பது, அந்த செயலிகளுக்கு ஏற்பட்ட முடக்கம் மூலம் அறியமுடிகிறது எனக் கூறியுள்ளனர். ரஷ்யா, தங்கள் நாட்டுக்கு சொந்தமான இணையதளங்கள், வலைப்பின்னல்லளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை பேஸ்புக் முடக்கம் உணர்த்திருப்பதாக தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.