Header Ads



விமல், கம்மன்பிலவின் மீது அமைச்சர் ரோஹித்தவின் தாக்குதல்


அமைச்சர்கள் விமல் வீரவங்ச(Wimal Weerawansa), உதய கம்மன்பில(Uthaya Gammanbila) போன்றோர் ஆளும் கட்சியின் கூட்டத்தில் ஒன்றை கூறிவிட்டு, வெளியில் சென்று இன்னுமொன்றை கூறுவதை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற வகையில் தம்மால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன(Rohitha Abey Gunawardena) தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் என்ற வகையில் எமக்கு கூட்டு பொறுப்பு உள்ளது. கட்சிக் கூட்டத்தில் ஒன்றை கூறி விட்டு, வெளியில் சென்று இன்னுமொன்றை கூறும் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற வகையில் எம்மால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

நாங்களே பிரதானமாக தாய் கட்சி என்பதே இதற்கு காரணம். எமது கட்சி அடிப்பணிய விரும்பாது. நாய்தான் வாலை ஆட்ட வேண்டும், வால் நாயை ஆட்டாது என்பதை நாங்கள் தெளிவாக கூற வேண்டும்.

சத்தங்களை கண்டு நாங்கள் அஞ்ச மாட்டோம். எமக்கும் அந்த பட்டறையின் சத்தம் பழக்கமானது. இரும்பு சத்தமும் பழக்கமானது. வாள்களின் சத்தமும் பழக்கமானது.

பொறுத்தமில்லை என்றால் என்ன செய்ய வேண்டும், விவாகரத்து செய்ய வேண்டும். பெண் விரும்பும் நபரை மண முடிப்பதற்காக விவாகரத்து செய்ய முடியும். ஆண் விரும்பிய பெண்ணை மணந்துக்கொள்ள முடியும் எனவும் ரோஹித்த அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார். Twin

No comments

Powered by Blogger.